வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பராமரிப்பு கருவிகள்
குளியல் அருகில் இருக்கும் தண்ணீர் குழாயை திறந்து அடைப்பை நீக்குவது, மின்விசிறிக்கு கண்டன்சர் மாற்றுவது, கதவு தாழ்பாளை சற்று தளர்த்த செய்வது, குக்கர் கைப்பிடிகளை இறுக்கமாக திருகுவதற்கு போன்ற சிறு சிறு பராமரிப்பு வேலைகளை ஆட்கள் எதிர்பார்க்காமல் நாமே செய்து கொள்ள முடியும். அதற்கு தேவையான கருவிகளை வீட்டில் வாங்கி வைத்திருந்தால் பழுது பார்ப்பது எளிதாக இருக்கும். அடிப்படை வேலைகளுக்கு தேவைப்படும் கருவிகள் என்னென்ன அவற்றின் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் :
சுத்தியல்
சுவற்றில் ஆணி அடிப்பது, மர ஜாமான்களில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை நீக்குவது, சமையலறையில் தேங்காய் உடைப்பது, என சுத்தியல் பல்வேறு வழிகளில் பயன்படும்.
ஸ்பேனர்
பல்வேறு உபகரணங்களில் இருக்கும் நட்டுகளை முடுக்குவதற்கும், கழற்றுவதற்கும் பலவித அளவுகளில் இருக்கும் ஸ்பேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டில் குறிப்பாக தண்ணீர் குழாய்களை பழுது பார்க்க ஸ்பேனர்கள் அவசியமானது.
கட்டிங் பிளேயர்
குழந்தைகளின் பள்ளி ப்ராஜெக்ட் களுக்கு அவ்வப்போது ஏதாவது மாடல்கள் செய்யும்படி சொல்வார்கள்.
அப்போது கம்பிகளை வளைத்து நெளித்து பயன்படுத்தவும்,
துண்டுகளாக வெட்டவும், கட்டிங் பிளேயர்கள் தேவைப்படும்.
சுய தொழிலாக ஃபேஷன் அணிகலன்கள் தயாரிக்கும் பெண்களுக்கு இது முக்கியமான கருவியாகும்.
நோஸ் பிளேயர்
கால்கொலுசு போன்ற நகைகளின் கொக்கிகளை தளர்த்தவும், இருக்கவும் நோஸ் பிளேயர் பயன்படும்.
சுவற்றில் அடித்திருக்கும் பழைய ஆணிகளை நீக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
டிரில்லிங் மெஷின்
புகைப்படங்கள் மாற்றுவதற்கும், சமையல் அறைகளில் பொருட்களை அடுக்கி வைக்கும் ரேக்குகளை மாற்றுவதற்கும், தேவையான ஆணிகளை அடிப்பதற்கு காங்கிரட் சுவரில் துளையிட வேண்டும் அதற்கு ட்ரில்லிங் மிஷின் தேவைப்படும்.
இதனை பயன்படுத்தும் போது பாதுகாப்பு கண்ணாடி மற்றும் கை உறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
சுவற்றில் ஆணி அடிக்க முடியாத நிலையில் சுவர் அலங்கார பிரேம்களின் பின்புறம் டபுள் டேப்பை ஒட்டி பயன்படுத்தலாம்.
ஏணி
மடக்கும் வசதியுடன் கிடைக்கும் அலுமினிய ஏணியை வீட்டில் வைத்திருப்பது நல்லது.
பயன்படுத்தாத பொருட்களை பரங்கில் சேர்த்து வைத்திருப்பது பலரின் வழக்கம் .
அவற்றை தேவைப்படும்போது மேலே இருந்து எடுத்து உபயோகிக்கவும், மின்சார விளக்குகளை பழுது பார்க்கவும் இந்த ஏணி தேவைப்படும்.