கோடைகால துளிகள்
தண்ணீர்
தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் அருந்தவும் .எழுந்திருக்க தயங்கி தள்ளி போட வேண்டாம். மண் பானை தண்ணீர் மிகவும் நல்லது .
முகம்
பன்னீர் ரோஜா இதழ்களை பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாகப்படும் இடங்களில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் அங்குள்ள கருமை நீங்குவதோடு முகம் பட்டு போல மிருதுவாகும்.
காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்
பருவ கால காய்கனிகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள மாதுளை, தர்பூசணி, நுங்கு, கிர்ணி, முலாம்பழம், வெள்ளைப் பூசணி, பரங்கிக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, புடலங்காய் ஆகியவற்றை சாப்பிடலாம்.
மாம்பழம்
இயற்கை அந்தந்த கால நிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்ப பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது.
இந்த காலங்களில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள்.
வேனல் கட்டிகள், வியர் குறு போன்ற பாதிப்பு இருப்பவர்களை தவிர மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம் .
செரிமானம்
எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை சேர்த்து அசைவ உணவுகள் குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன், அதிக காரம், புளிப்பு, மசாலா ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது .
சூடு
இரவில் உள்ளங்காலில் பசு நெய் அல்லது விளக்கெண்ணெய்யினை தேய்த்து விட்டு தூங்குவது, உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பது ஆகியவை கண்களின் சூட்டை தணிக்கும்.