தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு

தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு

முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பல வித நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

 15 இல் இருந்து 20 நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் ஒன்றாகும்.

 ஏரோபிக்ஸ், கைகால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கிறது .

முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயனளிக்கும்.

 ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை.

 வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்,

 சீரான உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக்க உதவுகிறது.

 வயது மூத்தவர்கள் ஏரோபிக், யோகா, தசைத்தளவர்க்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலிருந்து முதியோர்களை காக்க வல்லது .

1. லிப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது.

2. பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது .

3. அலுவலகங்களில் இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.

 4. சகப் பணியாளர்களை மதிய உணவிற்கு பின் மேற்கொள்ளும்  சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்ந்து கொள்ளலாம்.

5. தொலைக்காட்சியில் விளம்பர இடைவெளிகளின் போது கை கால்களை நீட்டி உட்கார்ந்து எழுந்தோ, தசைகளை தளர்வடைய செய்யலாம்.

6. பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்.
 7. இரவு உணவிற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை