நன்னாரி
கோடையில் குளிர்பானங்கள், பலசரக்குகள் நமக்கு குளிர்ச்சியை தந்து உடல் சூட்டை தணிக்கிறது .
இந்த வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி, உடல் சூடு, வேர்க்குரு, வேனல் கட்டி, அதிக தாகம், நா வறட்சி இவைகளை குணப்படுத்த நன்னாரி சிறந்தது .
நன்னாரி ஒரு வெப்ப மண்டல தாவரம். இது கொடி போல் தரையில் படரும்.
இதில் இரண்டு வகை உண்டு சுருள் சுருளாக இருந்தால் சீமை நன்னாரி.
மாகாளி கிழங்கு வேர்தான் நாட்டு நன்னாரி .
இதை பானங்கள் தயாரிக்கவும், நோயை குணப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள்.
இதன் வேரை தண்ணீரில் ஊற வைத்து கஷாயமாகவோ ? காய்ச்சி பானமாகவோ ? அருந்தலாம்.
பாெடியாக்கி ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி கலந்து குடித்தால் சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும்.
கசாயத்தை சிறிது பால் சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு, இருமல் குணமாகும்.
வேரை சுட்டு கரியாக்கி பொடித்து சீரகம் ,சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து நாள் தோறும் இரண்டு வேளை விதம் 10 நாள் சாப்பிட சிறுநீர் எரிச்சல் ,சிறுநீர் கடுப்பு குணமாகும்.
நன்னாரி பசியை தூண்டும்.
சூட்டை தணிக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
இது வாதம், மூட்டு வலி, சிறுநீரக கோளாறு , வேர்க்குரு, வேனல் கட்டி, தலைவலி, தலை சூடு ஆகியவற்றிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வேரை காய்ச்சி நீரில் பெருங்காயம், நெய் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
பொடியை தேனில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண் வராது.
இது இந்த கோடை காலத்தில் பானமாகவும் ,மருந்தாகவும் பல விதத்தில் பயன் அளிக்கிறது.
மண் பானையில் இதன் வேரை சுத்தப்படுத்திவிட்டு தண்ணீரில் போட்டு அதை குடிக்க தண்ணீர் தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களை வராமல் பாதுகாக்கும்.