ஆஹா கோதுமை
கோதுமை தானியத்திலிருந்து பால் பிழிந்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
சம்பா கோதுமையை சாப்பிடும்போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கணிசமாக குறையும்.
வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல் அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
கோதுமையில் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும் கொழுப்பின் அளவை குறைக்க முடியும்.