ஃப்ரிட்ஜ் பத்திரம்
நடுத்தர குடும்பங்களில் அளவாக சமைப்பது என்பது ஆகாத காரியம்.
அதே சமயம் நீந்து போகும் உணவுகளை குப்பையில் கொட்டினாலும் பட்ஜெட் தாங்காது.
அப்படிப்பட்ட சூழலில் நிற்கும் பொழுது நமக்கு தெரிவது பிரிட்ஜ் தான்.
கோடையில் பல வீடுகளில் ஃப்ரிட்ஜ் இன்னமும் பிசியாகிவிடும்.
பிரிட்ஜை எப்படி பக்குவமாக பராமரிப்பது?
சிலர் மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைப்பார்கள் அது தவறு.
அதேபோல பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை ஃபிரிஜ் உள்ளே வைப்பது தவிர்க்க வேண்டும்.
தரமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
காய்கறி பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இருக கட்டி வைப்பதால் உள்ளே ஆவி அடித்து அவை அழுகிவிடக்கூடும்.
இதை தவிர்க்க நெட் பேக் எனப்படும் வலை பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம் .
சூடான பொருட்களை பிரிட்ஜினுல் வைக்க கூடாது.
அவற்றின் வெப்பநிலை பிரிட்ஜில் முழுவதும் பரவி உள்ளே சூட்டை அதிகரித்து விடும் .
இதனால் மின் சலப்பு அதிகரிப்பதுடன் ஏற்கனவே குளிர் நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அளவை கெட்டுப் போகக்கூடும்.
பிரிட்ஜ் கதவை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும்.
அவசியம் எனில் கொஞ்சமாக திறந்து உடனே மூட வேண்டும்.
பிரிட்ஜ், கிச்சனில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே மற்ற அறைகளை விட சமையலறையில் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும் .
தவிர கிச்சனின் எண்ணெய் பிசுக்கு ஃபிரிட்ஜை கறையாக்கும்.
சிலர் மின் சிக்கனம் என பிரிட்ஜை அடிக்கடி ஆப் செய்து விடுவார்கள். இது தவறு.
என்னதான் ஆறு அல்லது எட்டு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜ் அணைத்து வைத்திருந்தாலும் மீண்டும் ஆன் செய்யும்போது ஃப்ரிட்ஜ் முதலில் இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இதனால் மின் செலவு அதிகரிக்கும்.
வெயில் காலம், குளிர்காலம் என தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி ஃப்ரிட்ஜின் குளிர்ச்சியை மாற்றி வைக்க வேண்டும் .
இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைந்திருந்தாலும் தரமான ஸ்டெபிலைசர் வாங்கி பொருத்துவது நல்லது .
மாதம் ஒரு முறை பிரிட்ஜ் சுத்தம் செய்வது நல்லது.
வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா, எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்து மென்மையான துணியால் ஃப்ரிட்ஜின் உள்ளே துடைக்க வேண்டும்.
வெளிப்பாகத்தை காரத்தன்மை குறைந்த திரவங்கள் பயன்படுத்தி துடைக்கலாம் .
ஃப்ரிட்ஜின் கேஸ் கட்டை நன்றாக துடைத்து பராமரிக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற கொள்ளளவில் ஃப்ரிட்ஜ் வாங்குவது நல்லது .
அசைவ உணவு மற்றும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும்தான் ஃப்ரீசரில் பயன்படுத்த வேண்டும் .
சிலர் டம்ளர் அல்லது வேறு பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி ஃபிரிஜரில் வைப்பார்கள் .
இதை தவிர்க்க வேண்டும் .
சிலர் தேவையில்லாத பொருட்களை பிரிட்ஜ் மீது வைத்து அதை ஒரு செல்ஃப் போல பயன்படுத்துவார்கள் .
அதிக எடை உள்ள பொருட்களை பிரிட்ஜ் மீது வைக்கக் கூடாது .
ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வெளியூர் செல்லும்போது மட்டும் பிரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்லலாம் .
ஒரு வார பயணத்துக்காக ஃப்ரிட்ஜை அனுப்பிவிட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.