பட்டுச்சேலை பராமரிப்பு
பட்டுப் புடவைகளில் நிறைய ரகங்கள் இருந்தாலும் பெண்கள் அதிக அளவில் வாங்குவது காஞ்சி, ஆரணி, தர்மாவரம், கும்பகோணம், மைசூர், பனாரஸ் ஆகியவைகள் தான் அபூர்வா என்ற பட்டுப்புடவைகளும் வருகிறது.
பட்டு சேலையை மஞ்சள் பையில் போட்டு வைத்தால் அப்படியே இருக்கும்.
புடவைக்கு பாலீஸ் வைத்து தைத்தால் கால் கொலுசில் மாட்டி ஜரிகை பிரியாது.
முந்தியில் நெட் வைத்து தைத்தால் கை வளையல், மோதிரக் கல்லில் ஜரிகை மாட்டாது .
சேலை முந்தியில் குஞ்சலம் வைத்தால் அழகாக இருக்கும் .
பட்டுப்புடவையை சோப்பு பவுடர் கொண்டு துவைக்க கூடாது .வெறும் தண்ணீரில் அலசினாலே போதும்.
உடுத்திய பிறகு இரண்டு மணி நேரம் காற்றாட உலர வேண்டும்.
கையை வைத்து அழுத்தி தேய்த்து மடித்தாலே அயன் செய்தது போல் இருக்கும்.
கரைப்பட்டு விட்டால் விபூதி கொண்டு தேய்த்து தண்ணீர் விட்டு அலசினாலே போதும்.
எலுமிச்சை சாறு சேர்த்து அலசினால் சாயம் போகாது.
டிரை வாஸ் செய்யலாம்.
புடவை கிழிந்து விட்டால் பெண் குழந்தைகளுக்கு பாவாடையாக மட்டுமில்லாமல் சுடிதார், லெஹங்கா போன்ற இன்றைய கால நவீன ஆடையாகவும் தைக்கலாம் .
பட்டுப் புடவைகளை பூச்சி அரிக்காமல் இருக்க வசம்பை ஒரு துணியில் கட்டி உள்ளே பீரோவில் வைக்க வேண்டும்.
புடவையை எக்காரணம் கொண்டும் அட்டைப்பெட்டியோடு வைக்கக்கூடாது.
புடவைக்கு மேட்சிங் பிளவுஸ் தைக்கும் போது கலர் போகாத துணியாக வாங்கி தைக்க வேண்டும் .இல்லை என்றால் வியர்வையில் சாயும் நனைந்து புடவையில் ஒட்டிவிடும்.