குண்டு தொலைக்காத கார்கள்

குண்டு தொலைக்காத கார்கள்

குண்டு தொலைக்காத கார்களில் அரசியல் தலைவர்கள், பிரதமர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று படித்திருப்போம்.

 அப்படி துப்பாக்கி குண்டு தாெலைக்காத கார்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்ப்போம் .

குண்டு தொலைக்காத வகையான கார்களுக்கு ஆர்மர்ட் லைமோ சைன் என்று பெயர்.

 இந்த கார்களின் கண்ணாடிகள் கேவ்லார் எனப்படும் உறுதியான நைலான் நாற்களை கொண்டும் மற்றும் பாலி கார்பனேட் எனப்படும் சீட்டுகளைக் கொண்டும் கணமாக செய்யப்படுகின்றன.

 இந்த கண்ணாடியில் தோட்டாக்கள் பாய்ந்தால் அவை கண்ணாடியில் பட்டு தெறித்து உள்ளே போகாமல் வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு. வீரியம் தணிந்து கீழே விழுந்துவிடும்.

 இது தவிர காரில் தலைவர்கள் உட்காரும் இடத்தை சுற்றிலும் 10 மில்லி மீட்டர் கனத்துக்கு ஐந்து அடுக்குகளால் இரும்பு தகடுகளை பொருத்தி இருப்பார்கள்.

 இந்த இரும்பு தகடுகளும், துப்பாக்கி தோட்டாக்களை உள்ளே அனுமதிக்காது.

 மேலும் குறிப்பிட்ட டிரைவரை தவிர வேறு யாராவது காரை ஓட்டினால்  காருக்குள் பொருத்தியிருக்கும் கம்ப்யூட்டர் அபாய ஒலி எழுப்பி தெரியப்படுத்தி விடும்.

 இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த காரை யாராவது அந்நியர்கள் தொடர்ந்து வந்தால் காரை மறைக்கும் விதத்தில் வெண்மையான புகை மண்டலத்தை எழுப்பி அவர்களை குழப்பி விடும்.

 சாதாரண காரின் எடையை காட்டிலும் ஆறு மடங்கு எடை கொண்ட இந்த வகையான கார்களின் விலையும் ஆறு மடங்கு.

 உதாரணத்திற்கு ஆடி ஏ3 வகை கார்கள் 1600 கிலோ கிராம்  எடை என்றால் குண்டு துளைக்காத காரின் எடை 9600 கிலோ கிராம் .

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கார் தான் உலகிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்.
 இந்த கார் நாசாவின் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டது காரின் பெயர் தி பீஸ்ட்.

கருத்துரையிடுக

புதியது பழையவை