பழைய மொபைல்களை இப்படியும் பயன்படுத்தலாம்

பழைய மொபைல்களை இப்படியும்  பயன்படுத்தலாம்
 புதிதாக லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் வாங்கி இருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த பழைய ஆண்ட்ராய்டு மொபைலை கிடப்பில் போடுவதற்கு பதிலாக ஸ்மார்ட்டான மாற்று வழிகளில் பயன்படுத்தலாம் அதற்கான சில ஆலோசனைகள்:

 சிசிடிவி கேமரா 

உங்கள் பழைய மொபைலில் இருக்கும் கேமரா நன்றாக செயல்படுகிறதா? மொபைல் செக்யூரிட்டி ஆப் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து அதனை சிசிடிவி கேமராவாக பயன்படுத்தலாம்.

 அதை வீட்டின் எந்தப் பகுதியிலும் வைத்து கண்காணிக்கலாம் .

வீட்டின் நுழைவாயில் விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றில் வயர்லெஸ் கேமராவாக பயன்படுத்தலாம் .

இந்த மொபைல் போனை எளிதாக சார்ஜ் செய்யும் வகையில் அமைப்பது முக்கியம். 

தகவல் சேகரிப்பு சாதனம்

தாங்கள் செல்லும் இடங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மொபைல் ஃபோன்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து வைப்பது பலரின் வழக்கம்.

 இவை அனைத்தையும் ஒரே போனில் சேமித்து வைக்கும் போது அதன் செயல்பாடு வேகம் குறையும்.

 எனவே இத்தகைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேமித்து வைப்பதற்கு பழைய ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தலாம்.

 மேப்பாக பயன்படுத்தலாம்

நம்மில் பலர் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு செல்லும்போது சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு மொபைல்களில் உள்ள மேப் நேவிகேஷன் தான் நாடுவோம்.

 இதனால் புதிய மொபைல் போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவாக இறங்கிவிடும்.

 இதை தவிர்க்க கார், டூவீலர் ஆகியவற்றில் பழைய மொபைல் ஃபோன்களை பொருத்தி நேவிகேஷன் டிவைஸாக பயன்படுத்தலாம் .

கார் கேமரா 

பழைய மொபைல் போனை காரின் டேஷ் போர்டில் வைத்து டேஸ் கேமராவாக பயன்படுத்தலாம்.

 தற்போது வரும் புது புதிய ரக கார்களில் பேஸ் கேமரா வசதி உள்ளது.

 பழைய கார்களில் இந்த வசதியை பெற விரும்புபவர்கள் பழைய மொபைல் போனை பயன்படுத்தலாம்.

 கேமரா செயல்பாடு மற்றும் பேட்டரி திற நன்றாக இருக்கும் பழைய பாேன்களை தூக்கி எறியாமல் இதற்காக உள்ள சில செயல்களை மட்டும் பதிவிறக்கம் செய்த உபயோகிக்கலாம்.

 நீண்ட தூர பயணத்தின் போது இந்த வசதி பல வகையிலும் பயன்படும்.

 யுனிவர்சல் ரிமோட் 

டிவியுடன் இணைக்கும் போது செட்டாப் பாக்ஸ், சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் டிவைஸ்கள் என அனைத்திற்கும் தனித்தனி ரிமோட்டுகள் இருக்கும்.

 இவற்றை ஒரே ரிமோட்டில் இயங்கும் வகையில் பழைய மொபைல் போனை யுனிவர்சல் ரிமோட்டாக பயன்படுத்தலாம் .

இதற்காக யுனிவர்சல் ரிமோட் செயல்பாடு என்ற செயலி உள்ளது.

 இதை உங்கள் பழைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து அனைத்து மின் சாதனங்களையும் ஒன்றிணைத்து இயக்கலாம்.

 மறுசுழற்சி

பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மொபைல் ஃபோனை தூக்கி எறியாமல் மறுசுழற்சி செய்யலாம்.

 அதில் இருக்கும் சில உதிரிப்பாகங்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்தால் அவற்றை மாற்று வழியில் பொருத்தி பயன்படுத்தலாம் .
மைக், பேட்டரி, மதர்போர்ட் உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் பயன்படும் இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்காது.

கருத்துரையிடுக

புதியது பழையவை