மகிழ்ச்சியாக வாழ ஐந்து வழிகள்
உங்களைப் பற்றி சிந்தியுங்கள்
பெரும்பாலானவர்கள் அவர்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதே கிடையாது.
வாழ்க்கையில் நாம் எவ்வளவு நல்லது செய்து இருக்கிறோம்.
நம்மால் என்ன செய்ய முடிந்தது?
என்ன செய்ய முடியவில்லை?
நம்மால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
எத்தனை பேரையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளோம் ?
என்பதை பற்றி ஒரு முறையேனும் சிந்தித்துப் பாருங்கள் .
முதலில் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் .
அன்பு செலுத்துங்கள்
உங்களை நேசிப்பவர்களையும், நீங்கள் நேசிப்பவர்களை எந்த சூழலிலும் கைவிடாதீர்கள் .
வெறுப்புகள், வீண் கோபங்களை தவிர்த்து விட்டு சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.
உங்களுக்கு யாரேனும் உதவி செய்தால் அவர்களுக்கு நன்றி சொல்ல தயங்காதீர்கள்.
தடைகளை தகருங்கள்
வாழ்க்கை பயணம் தடைகள் நிறைந்ததாக தான் இருக்கும்.
அவற்றைக் கண்டு கலங்காமல் தடைகளை தகர்த்து முன்னேறி செல்லுங்கள்.
சோகங்களால் மனது சோர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துணிந்து செயல்படுங்கள்.
உங்கள் கவலைகள் நாளடைவில் காணாமல் போய்விடும்.
மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உங்களை சுற்றி எவ்வளவு பெரிய தவறு நிகழ்ந்தாலும் முடிந்தவரை அனைவரையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள் .
மன்னிப்பு உங்கள் மரியாதையை அதிகரிக்கும்.
நிம்மதியாக உறங்குங்கள்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்று தூக்கம்.
தூங்கும்போதுதான் மனமும், உடலும் அமைதியாக இருக்கும்.
அப்போதுதான் நன்றாக யோசித்து செயல்பட முடியும்.
மனது சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சி தானாகவே வரும்.