வாழ்வோம் ஸ்வீட்டாக

வாழ்வோம் ஸ்வீட்டாக 

லட்டு 
தனித் திறந்து சாதிப்பது கடினமான ஒன்று .

சேர்ந்து உழைப்பது பெரும் பலம்.

 இதுவே பூந்தியாக இருந்து லட்டாக மாறிய உருண்டை ஸ்வீட் சொல்லும் ரகசியம்.

 குலாப் ஜாமுன்
மென்மையாக இருப்பது பலவீனமல்ல.

 மென்மையாக இருப்பதும் மேன்மையே.

 ஆனால் சில இடங்களில் சில நேரங்களில் சில மனிதர்களிடம் கடினமாகவும் இருக்க வேண்டும்.

 இது நாவிலே கரையும் சாஃப்ட் குலோப் ஜாமுன் உணர்த்தும் செய்தி .

ஜிலேபி
வடிவங்கள் மாறலாம். வண்ணங்களும் மாறலாம்.

 இவை எல்லாம் மனிதர்கள் இடையே உயர்வு தாழ்வு பார்ப்பதற்கான அளவுகோள்கள் அல்ல.

 நாம் எல்லோருடனும் ஸ்வீட்டாக இருப்போம்.

 இது கண்ணா பின்னா வடிவத்தில், மிதமான புளிப்போடும், இதமான இனிப்போடும் ருசிக்க வைக்கும் ஜிலேபியின் வேண்டுகோள்.

 சோன் பப்டி
ஒரு செயலில் வெற்றி பெற என்னென்ன தேவை.

 திட்டம், முனைப்பு மற்றும் உழைப்பு வித்தியாசமான இனிப்பாகிய சாேன் பப்டி சொல்வதும் இதுதான்.

சாேன் பப்டி தயாரிப்பதற்கு ஒரு திட்டம் தேவை.

 ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் உழைப்பும் தேவை .

அப்படி இருந்தால் தான் பாகுபதம் பார்ப்பது முதல் நூலாக இருப்பது வரை சாத்தியம்.

 திட்டமிட்டு ஒன்றுபட்டு முனைப்புடன் உழைத்தான் வெற்றி இனிக்கும் என்பதே சாே பப்டி தயாரிப்பில் நாம் உணரும் உண்மை.

கருத்துரையிடுக

புதியது பழையவை