அடிக்கடி சொடக்கு போடலாமா ?
கை விரல்களில் சொடக்கு எடுப்பது பலருக்கும் ஒரு பழக்கமாகவே உள்ளது.
சிலர் கால விரல்களில் கூட சொடக்கு எடுப்பார்கள்.
இதை நெட்டி முறிப்பது என்றும் சொல்வார்கள்.
ஏற்படும் சத்தம் ஒரு ரிலீஃப் ஆக உணர்கிறது.
படபடப்பு, மன அழுத்தம், அன்றாட பழக்கம் என இப்படி சொடக்கு எடுக்க பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் நம்மில் சொடக்கு எடுக்காதவர் யாரும் இருக்க மாட்டோம் .
ஒரு சிலர் தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களின் விரல்களை பிடித்து சொடக்கு எடுப்பார்கள் .
அது சரி இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதாவது ஆபத்து உண்டா?
விரல்களை மடக்கியோ அல்லது இழுத்தோ சொடக்கும்போது மூட்டு இணைப்புகளுக்கு இடையே இருக்கும் சைனோவியல் திரவத்தில் கரைந்திருக்கும் வாயுக்களில் குமிழ்கள் உருவாவது அல்லது மோதிக் கொள்வதால் சொடக்கு உடைக்கும் சத்தம் கேட்கும், கேட்பதாக கருதப்படுகிறது .
ஆனால் அண்மையில் ஆய்வுகளில் இதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சொடக்கும்போது மூட்டுகள் அழுத்தி விலகும் போது அங்கு ஒரு குழி உருவாகுவது ஆகவும் அப்போது சத்தம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
அந்த குழி மீண்டும் பழைய நிலைக்கு வர இருபது நிமிடங்களாகும் என்றும், அதனால் தான் ஒரு முறை சொடக்கு எடுத்த உடனேயே மீண்டும் சொடக்கு எடுக்க முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில பக்க விளைவுகள் ஏற்படும் ரிஸ்க் உள்ளது.
அடிக்கடி சொடக்கு எடுப்பதால் மூட்டு இணைப்புகளை சுற்றி உள்ள மெல்லிய சதைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
விரல்களுக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்தும்.
இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது .
கை விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுப்பதால் கையின் வலிமை பாதிக்கிறது.
மேலும் இதனால்தான் நாளடைவில் கைவிரல்களில் வீக்கம் ஏற்படும்.
கணினியில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட கைவிரல்கள் அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால் கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து விரல்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அது நரம்பு மண்டலத்தை தாக்கி அதிக வலியை ஏற்படுத்தும்.
ஆனால் வீரர்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து முடிக்க செய்து கொள்வது மிகவும் நல்லது.
மூட்டு விலகலாம் உங்கள் விரல் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் ஏற்பட்டால் அது முடக்குவாத அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனே மருத்துவர் அணுகி ஆலோசனை பெறுங்கள்.