சுடுநீர் குளியல் Vs குளிர்ந்த நீர் குளியல்

குளிர்ந்த நீரில் குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

1. நம்பினால் நம்புங்கள், குளிர்ந்த நீரில் குளிப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்களுக்கு எளிதில் குளிர்ச்சி காரணமாக வரக்கூடிய ஜலதோஷம் வராது.

2. சருமத்தில் உள்ள சிறு துவாரங்களை இறுக்கமாக்கும்.

3. முகத்தில் உள்ள துவாரங்கள் இப்படி டைட்டாகும் பொழுது முகத்தசைகளில் தோன்றக்கூடிய தோய்வுகள் அடங்கும்.

4. பெண்களே என்னதான் மேக்கப் செய்தாலும் உங்கள் முக சருமம் விரைவில் டல்லாகும் தன்மை கொண்டதாக இருந்தால் மேக்கப் செய்து முடித்தவுடன் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட தண்ணீரில் அல்லது பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒட்டி எடுங்கள்.

5. சருமத்தின் துளைகள் இறுகுவதால் முகம் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
6. குளிர்ந்த நீரில் குளிப்பது மனதை அமைதியாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்.

7. உடலின் மெடபாலிசத்தை உயர்த்தும்.


 வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் 
1.களைப்பை நீக்கும்.

2. தலைவலியை நீக்கும் அல்லது இதமாக்கும்.

3.தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

4. மூக்கடைப்பை நீக்கும்.

5.சருமத்தின் நுண்ணிய துளைகளை திறக்கும்.

6. அழுக்குகளை வெளியேற்றும்.
7. காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களை உடனுக்குடன் சுறுசுறுப்பாகும். இரவில் உறங்கப் போகும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலை தளர்த்தி விரைவில் உறக்கம் வருவதற்கு உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை