தெரியும் தொப்பை தெரியாத ரகசியம்

தெரியும் தொப்பை தெரியாத ரகசியம் 
தொப்பை ஏற்படுவது என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்று போல இருப்பதில்லை .

ஆண்களுக்கு இடுப்பு பகுதிக்கு மேல் கொழுப்பு திசுக்கள் அதிகமாகி ஏற்படும் தொப்பை ஆப்பிள் வடிவத்தில் இருக்கும்.

 அதுவே பெண்களுக்கு இடுப்பு பகுதிக்கு கீழே கொழுப்பு திசைகள் திசுக்கள் அதிகமாகி ஏற்படும் தொப்பை பேரிக்காய் வடிவத்தில் இருக்கும்.

 இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண்களுக்கு உருவாகும் பேரிக்காய் வடிவ தொப்பையை விட ஆண்களுக்கு ஏற்படும் ஆப்பிள் வடிவ தொப்பை ஆபத்தானது.

காரணம், இந்த கொழுப்பு செல்கள் தொடர்ச்சியாக கொழுப்பு அமிலத்தை கொடுத்துக் கொண்டே இருப்பதால் இன்சுலின் சார்ந்த பிரச்சனைகள், நீரழிவு, அதிக கொழுப்பால் ஏற்படும் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணமாகி விடுகிறது.

 மிகக் குறிப்பாக அதிக இன்சுலின் சுரப்பதற்கு வழிவகுத்து கொழுப்பை உடைப்பதற்கு பதிலாக கொழுப்பை உருவாக்கி உடல் எடையை மேலும் அதிகரிக்கிறது.

 இடுப்பின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் இருக்கும் கொழுப்பு திசுக்களின் தன்மை செயல்பாடுகளும் வெவ்வேறானவை.

 இடுப்பு பகுதிக்கு மேல் ஏற்படும் தொப்பை ஏற்கனவே அங்கு இருக்கும் கொழுப்பு செல்கள் அளவில் பெரியதாக மாறுவதால் வருகிறது ஆனால் இடுப்பு பகுதிக்கு கீழ் ஏற்படும் தொப்பை ஏற்கனவே அங்கு இருக்கும் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படுவது.

 இரண்டாவது முக்கியமான விஷயம் என்னவென்றால் கொழுப்பு செல்களின் அளவு பெரியதாக இருக்கும் தொப்பையை குறைப்பது எளிதானது.

 ஆண்களுக்கு ஆனால் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள தொப்பையை குறைப்பது கடினம்.

 பெண்களுக்கு உடல் எடை குறைப்புக்கு பெண்கள் அதிகம் சிரமப்படுவது இதனால் தான் .

பெண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையை விட கூடுதலாக அதிகரிக்க துவங்கும் போது கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
முழுவதும் விட்டு விட்டு பிறகு கடினமான உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் என்று உடலை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குவதை தவிர்க்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை