வறண்ட சருமமா? கவலை வேண்டாம்

வறண்ட சருமமா? கவலை வேண்டாம்
 மழைக்காலமும், குளிர்காலமும் வறண்ட சருமத்தின் எதிரி என்றாலும் சரியாக பொருந்தும்.

 இதோ துவங்கி விட்டது மழைக்காலம் தொடர்ந்து நமக்கு ஜனவரி இறுதிவரை குளிர் வறண்ட சருமத்தை பராமரிப்பது எப்படி ?

இதோ சில டிப்ஸ் 

பொதுவாக மழை, குளிர் என்றாலே வெந்நீர் வைத்து குளிப்பது தான் வழக்கம். அப்படி வெந்நீரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஓர் அளவு வெப்பநிலையை குறைத்து குளிக்கலாம்.

 குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை உடலில் பூசிக்கொண்டு குளிப்பதால் சோப், பாடி வாஷ் மேலும் காலநிலை காரணமாக சருமம் வறட்சி அடைவது குறையும்.

 ஏசி தேவைப்படாது ஆனாலும் அலுவலகங்கள், பொது இடங்களில் தவிர்க்க முடியாது .நல்ல மாய்சுரைஸர் அல்லது நல்ல தரமான பாடி லோஷன்கள் பயன்படுத்தலாம் வாரம்.

 ஒரு முறை எண்ணெயை காய வைத்து தேய்த்து பழங்கால முறையில் சீயக்காய், கடலை மாவு கொண்டு உடல், தலையென பயன்படுத்தி குளிக்கலாம் .

அதீத வாசனை கொண்ட ஷாம்பு, சோப் போன்ற விதம் உடலின் வறட்சிக்கு இன்னொரு முக்கிய காரணம் எகையில் கூடுமானும் வரை ஜெல் வடிவ அல்லது வறண்ட சருமத்திற்கே உரிய சோப் ஷாம்புகளை பயன்படுத்தலாம் .

பாதாம் எண்ணெய் மாசுரேசர்களாக பயன்படுத்தலாம் .

மேலும் முடிக்கும் கூட பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

 முல்தானி மெட்டி, கற்றாழை, சந்தனம் போன்றவற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால் வறண்ட சருமம் கொண்டவர்கள் அதிக நேரம் வைத்திருக்காமல் கழுவி விட வேண்டும் .இல்லையேல் மேலும் வறண்டு விடும்.

 தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

 நிறைய பழச்சாறுகள், பழங்கள் உண்பதும் அவசியம்.

 கணினி, மொபைல் அதிக பயன்படுத்துவதாலும் கூட சருமம் ஈரப்பதம் குறையும் என்கையில் இடைவெளி கொடுத்து பயன்படுத்தலாம்.
 கண்களில் உண்டாகும் வறட்சி கூட குறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை