இயற்கை அழகுக்கு

இயற்கை அழகுக்கு
பார்லருக்கு சென்று பல ஆயிரம் செலவு செய்யும் முன் நம் வீட்டிலேயே உடல் பளபளப்புக்கு உதவும் பல உபகரணங்கள் இருப்பதை கவனித்தால் இயற்கையான பளிச் சருமம் கிடைக்கும்.

 தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பளபளப்பு ஆகும்.

 சிறு பயிறு கடலை மாவு, தேன் கலந்து குளித்து வர உடல் அழுகுபெறும்.

 அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்களின் கடினத் தன்மை குறையும்.

 ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

 தர்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்க கால்கள் மெருதுவாக மாறும்.

 தயிர், முட்டை, எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க பொடுகு குறையும்.

 திராட்சை சாற்றை மசாஜ் செய்ய கழுத்தில் உள்ள கருமை குறைந்து கழுத்து அழகாகும்.

 பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தி தேய்த்துவர இதழ்கள் சிவப்பாகும்.

 தர்பூசணி பழச்சாறு, பைத்த மாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும் .
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை