உலக அளவில் அதிகரிக்கும் உடல் பருமன்
உலக அளவில் உடல் பருமனுடன் வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டி உள்ளது என்று தி லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் பருமன் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தகவல்கள் உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் 150 மில்லியன் பேர் அதில் 65 மில்லியன் சிறுமிகள் மற்றும் 94 மில்லியன் சிறுவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
1990 இல் இந்த எண்ணிக்கை 31 மில்லியனாக இருந்தது.
பெரியவர்களில் 879 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 504 மில்லியன் பெண்கள், 374 மில்லியன் ஆண்கள்உள்ளனர்.
பெரியவர்களில் உடல் பருமன் வீதம் பெண்களின் இரு மடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக எல்லா நாடுகளிலும் உடல் பருமன் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
1990 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் குறைவான எடையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வீதம் பெண்களில் ஐந்தில் ஒரு பங்காகவும் , ஆண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகவும், பெரியவர்களில் பாதியாகவும் குறைந்து இருக்கிறது.
2022-ல் 77 மில்லியன் சிறுமிகள் மற்றும் 108 மில்லியன் சிறுவர்கள் எடை குறைவாக இருந்தனர்.
1990 இல் இந்த எண்ணிக்கை சிறுமிகளில் 81 மில்லியன் ஆகவும், சிறுவர்களில் 138 மில்லியனாகவும் இருந்தது.
இது குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் பேராசிரியர் மஜீத் சொட்டி கூறிகையில் 1990 ஆம் ஆண்டில் உலகில் பெரும் பகுதியில் பெரியவர்களுக்கிடையே காணப்பட்ட உடல் பருமன் தற்போது பள்ளி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இடையே பிரதிபலிக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது .
அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இன்னமும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக உலகில் சில எளிமையான பகுதிகளில் அண்டர் வெயிட் ஓவர் வெயிட் என இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் சமாளிப்பது இன்றியமையாததாக இருந்தது.
இந்த இரண்டு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சமாளிக்க ஆரோக்கியமான , சத்தான உணவுகள் மலிவு விலையில் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.