புளியின் மகத்துவம்
புளியம்பழத்தில் சதை பற்றில் டார்க் டாரிக் அமிலம் எட்டு சதவிகிதம் உள்ளது .
சிட்ரிக் அமிலம் நான்கு சதவீதம் உள்ளது.
அசிட்டிக் அமிலம் , பொட்டாசியம், சர்க்கரை நான்கு சதவீதம் உள்ளன.
கொட்டையில் கொழுப்பு சத்தும், கார்போஹைட்ரேட்டும் 63 சதவீதம் உள்ளன.
நார்ச்சத்தில் பாஸ்பரஸ், நைட்ரஜன் முதலியன அடங்கியுள்ளன.
பழத்தில் ஆர்சானிக் அமிலம் இருக்கிறது.
உடலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு பழம் புளியை நீரில் கரைத்து பனைவெல்லம் சேர்த்து குடிக்க பித்தமும், பித்த தடிப்பும் குணமாகும்.
இதன் இலையின் கொழுந்தும் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வல்லமை உள்ளது.
இந்த இலையை அரைத்து மூட்டுவாத வீக்கம் மீது பற்று போட்டால் வீக்கம் குறைந்து வலியும் குறையும்.
விளாம்பழத்தை சர்க்கரை உடன் சேர்த்து சாப்பிடுவது போல புளியம் பழத்தையும் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடல் நல்ல குளிர்ச்சி பெறும்.
இதன் தோலை பொடித்து தூளாக்கி பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் நீங்கும்.