வாழைப்பழ தோலின் பயன்கள்:
நாம் வீசி எரியும் வாழைப்பழ தோல் பல வகைகளில் பயன் உள்ளது.
மரச்சில்லு, முள் போன்றவை பாதங்களில் குத்திவிட்டால் குத்திய இடத்தின் மேல் வாழைப்பழத் தோலை மெல்ல தடவுங்கள் பின் அந்த இடத்தில் அழுத்தம் தர முள் எளிதாக வெளியே வந்து விடும்.
சொரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்களும், சருமம் சில இடங்களில் தடித்து சிவந்து கருத்து இருப்பவர்களும் வாழைப்பழத் தோலை பாதிப்படைந்த இடத்தில்தான் தொடர்ந்து தடவி வர அரிப்பு, எரிச்சாலும் நீங்கி சரியாகும்.
மருக்களின் மீது வாழைப்பழத் தோலை ஒரு துணியால் கட்டி வைத்து பாருங்கள் பலன் தெரியும்.
வாழைப்பழ தோலை ஃப்ரிட்ஜில் வைத்து சரும பாதிப்பு உள்ள எந்த இடத்தில் தடவினாலும் இதமாக இருக்கும்.
மேலும் வறண்ட சரும பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகும்.
வாழைப்பழ தோல் இயற்கையான பீச் . காலை மாலை கரை பட்ட பற்களின் மீது தேய்க்க மின்னும் .
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு தோலை பாதங்களில் தேய்த்துக் கொள்ளலாம்.
பணம் செலவழிக்காமல் பெடிக்யூர் செய்தது போல் பாதங்கள் பள பளப்பாகும்.