கழுத்து வலியை குறைக்க
தூங்கும் போது சிறிய தலையணையை உபயோகப்படுத்தவும் .
தோள்பட்டிக்கும் சேர்த்தே தலையணை வரவேண்டும் .
உடல் பருமனாக இருப்பவர்கள் தலையணை இல்லாமல் தூங்கக்கூடாது .
புத்தகம் வாசிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும், நேராக அமர்ந்திருக்க வேண்டும்.
ஒத்தடம் கொடுத்தால் வலி உணர்ச்சி தற்காலிகமாக குறைய தொடங்கும். எனவே அதை பின்பற்றலாம் .
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் பள்ளங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், ஸ்பீட் பிரேக்கர் இருக்கும் இடங்களிலும் மிகவும் மெதுவாக செல்ல வேண்டும் .
கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் நேராக அமர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
கீ போர்டில் டைப் செய்யும் போது கைகளுக்கும் கீபோர்டுக்கும் இரண்டு இன்ச் இடைவெளி இருக்க வேண்டும்.
கால்களுக்கு அடியில் ஃபுட் ரெஸ்ட் பயன்படுத்தவும்.