சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சீரகம்
சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு வரும்போது தாங்க முடியாத வேதனை வழியில் சிரமப்பட வேண்டி இருக்கும்.
பொதுவாக சிறுநீரகம் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால் சரியான உணவுப் பழக்கம் இல்லாதது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் இருப்பது போன்று பல காரணங்கள் உள்ளன .
இந்த கொடுமையான பிரச்சனை நமது சிறுநீரகத்தை பாதிக்காமல் இருப்பதற்கு சிம்பிள் மருந்தை பார்க்கலாம்.
சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் மருந்துக்கு தேவையானவை கொத்தமல்லி, சீரகம், புதினா இலை மற்றும் எலுமிச்சம் பழம் ஆகும்.
சீரகத்தை ஒரு நாள் முன்பாகவே ஊற வைக்க வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பிறகு இதில் ஏற்கனவே ஒரு நாள் முன்பு ஊற வைத்த சிறுநீரகத்தை இந்த கொதிக்கும் நீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சீரகம் மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் இந்த கொதிக்கும் நீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு காெதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தை துண்டு துண்டாக அறுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும் .
பிறகு எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி, புதினா இலைகளை இந்த காெதிக்கும் நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்த பிறகு இதை எடுத்து வடிகட்டி இதமான சூட்டிற்கு வந்த பிறகு அப்படியே குடிக்கலாம்.
இந்த மருந்தை காலை வேளையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க வேண்டும் .
பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து குடித்தால் சிறுநீரகத்தை மட்டும் இன்றி சிறுநீரகம் சார்ந்த எல்லாப் பகுதிகளில் இருந்தும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.