மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 சாதத்தில் தினமும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் குணமாகும் .மேலும் கொப்பரை தேங்காய் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

 வேப்பிலையை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர அல்சர் வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.

 அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கிண்ணம் அகத்திக் கீரையை சமைத்து உட்கொண்டு வர விரைவில் குணமாகும்.

 சீரகம், அதிமதுரம், தென்னம்பாளைப் பூ, சர்க்கரை, சம்மளவு எடுத்து பால் விட்டு அரைத்து சிறு எலுமிச்சை அளவு எடுத்து பருகலாம்.

 வேப்பிலை, சுண்டைக்காய், பாகற்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்கள் அழிந்து போகும்.

 முடக்கத்தான் கீரையை சூப் தயாரித்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.

 கத்திரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் தோல் நோய்கள் ஏற்படும்.

 வெண்டைக்காய் அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலி, பேதி உண்டாகும்.

 அவரைக்காய் மிஞ்சினால் ருசியின்மை ஏற்படும்.

 பீர்க்கங்காய் மிகுந்தால் வாதம் ஏற்படும்.

 பாகற்காய் வெப்பத்தை உண்டாக்கும்.

 அதிக அளவு முருங்கைக்காய் பேதியை ஏற்படுத்தும்.

 கேரட் அதிகமாக சாப்பிட்டால் உடல் மஞ்சள் நிறமாகும்.

 புடலங்காய் மிகுந்தால் சளியை உண்டாக்கும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி வெந்தவுடன் சேர்த்து சாப்பிட நரம்பு தளர்ச்சி நீங்கும்.

 நோயில் குணமடைந்தவர்கள் தேனை ஆரஞ்சு பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் விரைவாக உடல் பலம் பெறும்.

 நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் உடலுக்கு பலம் கூடும்.

 இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கும் .

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் தலை பாரம் நீங்கும்.

 ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய், கரண்டி தேன் கலந்து தினமும் குடித்தால் கண் நோய் ஏற்படாது.
 பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் இருமல் மட்டுப்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை