கோவைக்காய்

கோவைக்காய்
கோவை இலைக்கும், கோவை காய்க்கும் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன.

 இவை பல்வேறு நோய்களுக்கு தீர்வு தந்து பலன் அளிக்கிறது.

 விலை குறைவாக எளிதில் கிடைக்கும்.

 இதை சமையலில் பயன்படுத்த அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம் .

கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம் .

கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வர சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவற்றை குணமாக்கும் .

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது.

 கோவை சாறு 10 மில்லி அளவில் காலையில் மட்டும் குடித்து வர இருமல், கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், வீக்கம் ஆகியவை தீரும்.

 கோவைக்காயை நறுக்கி வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி மூன்று வேளை சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 கோவைக்காயை பச்சடியாக செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.

 வயிற்றுப் புண்ணை ஆற்றி குடல் கிருமிகளை அழிக்கும் .
முற்றிய காயாக வாங்காமல் இளசாக வாங்கி சமைக்க சுவையாக இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை