வியர்வை நாற்றத்தை போக்க

வியர்வை நாற்றத்தை போக்க
கோடை வந்து விட்டாலே நாம் மின்விசிறி கீழே அமர்ந்திருந்தாலும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விடும்.

 குறிப்பாக வேலைக்கு செல்லும் பலர் பயண நேரத்தில் ஏற்படும் வியர்வையால் பல அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

 அதை போக்க சில டிப்ஸ் இதோ:

 கோடையில் ஏற்படும் வியர்வை நாற்றத்தையும் போக்க தக்காளிச்சாறு நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும்.

 ரோஜா இதழ்கள், ஆவாரப்பூ, சந்தனத்தூள், பாசி பயறு மாவு ஒரு ஸ்பூன் கலந்து கரைத்து உடலில் பூசி குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.

 பூண்டு, வெங்காயம், கொழுப்பு உணவுகள், சூடான, காரமான உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்.

 ரோஜா, ஆரஞ்சு தைலத்தை நீரில் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.

 அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து வாரம் இரண்டு முறை குளித்து வந்தால் வாடை மறையும்.

 தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து கால் மணி நேரம் குளிக்க கிருமிகளும் நீங்கி வாடை போகும்.

 இரவில் ரோஸ் வாட்டரில் சந்தன பொடி சேர்த்து குழைத்து அக்குளில் பூசி வர வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியா அழிந்து வாடை குறையும்.

 தினமும் குளிக்கும் முன்பு கட்டி தயிரை ரோஸ் வாட்டருடன் குலைத்து அக்குளில் பூசினாலும் வாடை வராது.

 புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து பூசி காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் வியர்வை நாற்றம் போகும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை நாற்றம் போகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை