முகப்பரு சொல்லும் செய்திகள்
முக அழகை கெடுக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு.
கன்னங்கள், நெற்றி, தாடை ஆங்காங்கே தோன்றும் பருட்கள் உடலின் ஆரோக்கிய குறைபாட்டை பிரதிபலிக்கும் அறிகுறிகள் ஆகவும் இருக்கின்றன.
அத்தகைய முகப்பருக்கள் உணர்த்தும் ஆரோக்கியம் குறித்த செய்திகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம் :
கன்னங்கள்
அதிகமாக புகைப்பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாலும் கன்னத்தில் பருக்கள் வரலாம்.
தலையணை உறைகளில் உள்ள நுண்கிருமிகள் சருமத்தை பாதிப்பதாலும், கன்னங்களில் பருக்கள் வரக்கூடும்.
அதை தடுக்க மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலையணை உரையை மாற்ற வேண்டும்.
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது.
வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சாேப்பால் முகத்தை கழுவ வேண்டும்.
புருவங்களுக்கு மத்தியில்
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் கல்லீரலுடன் தொடர்புடையது.
மது அருந்துபவர்களுக்கும், காெழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் உண்டாகும்.
உணவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையாக ஒவ்வாமையாலும் சிலருக்கு பருக்கள் வரக்கூடும்.
இதை தவிர்க்க பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கன்னங்களின் ஓரங்கள்
உடலில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும் போது கன்னங்களின் ஓரத்தில் சிறியதாக பருக்கள் தோன்றும்.
மாதவிடாய் காலத்தின் போது மட்டும் பெண்களுக்கு இந்த இடத்தில் பருக்கள் அதிகமாக வருவதை காணலாம்.
சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னரே அதன் அறிகுறியாக பருக்கள் தோன்றும்.
மேல் நெற்றி
உண்ணும் உணவு முழுமையாக செரிமானம் ஆகாமல் இருந்தால் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும்.
அதன் விளைவாக மேல் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும் கிரீன் டீ, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, கருநீல நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
காபி மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
கிழ் நெற்றி
புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால் போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம் .
மன அழுத்தம், மனச்சோர்வு, சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றாலும் பருக்கள் ஏற்படும் .
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.
தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும்.
காதுகள்
காபின் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிடும் போது உடலில் நீர் சத்து குறைவது போன்ற காரணங்களால் காதுகளில் பருக்கள் தோன்றும்.
உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வது மற்றும் அதிகளவு தண்ணீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை பருகுவதன் மூலம் இதை தடுக்கலாம்.
மூக்கு
இதயம் அல்லது ரத்த அழுத்தத்தில் பிரச்சனை ஏற்படும் போது மூக்கில் பருக்கள் தோன்றும்.
இதை போக்க மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தியானம் அல்லது பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.
15 நாட்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தாடை
ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் தாடை பகுதியில் பருக்கள் வரும்.
இந்தப் பகுதியில் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் ,பீன்ஸ், கீரை வகைகளை அதிகமாக சாப்பிடுவது நல்லது.