கரும்பு இருக்க கவலை எதற்கு?
வெயில் காலத்தில் கண்டதையும் குடித்து உடல் நலனை கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக நாம் இயற்கை பானமான கரும்புச்சாறு குடித்தால் வெயில் கொடுமை போகும்.
உடல் நலனுக்கும் நல்லது.
ஆயுர்வேதத்தின் படி கரும்பு இயற்கையான குளிர்ச்சி தன்மை கொண்ட பொருளாகும் .இது கல்லீரலை வலுப்படுத்தக் கூடியது .
மஞ்சள் காமாலை நோயை நெருங்க விடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது.
மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணை புரியக்கூடியது.
. எந்த வகை நோய் பாதிப்பின் போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்புச்சாறு உதவக்கூடியது.
கரும்புச்சாறு டயுரிக் பண்புகளைக் கொண்டது என்பதால் உடலில் இருந்த நச்சுக்கள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது.
தொடர்ந்து கரும்புச்சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் பழ கரும்புச்சாறு போக்கும்.
கரும்புச்சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை.
சோடியமும் குறைவாகவே இருக்கிறது.
சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்புச்சாறுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
கரும்புச்சாறில் அடங்கியிருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வயது அதிகரிக்கும் போது ஏற்படும் எலும்பு பலவீனத்தைப் போக்கி எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம் கரும்புச்சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் .
குறிப்பாக கோடைகால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும் .
அதனை சரிப்படுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது.
மேலும் கரும்புச்சாற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மற்றும் சுவாசம் சார்ந்த நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.
சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவர் ஆலோசனைப்படி குடிக்க வேண்டும் .
மற்றவர்கள் தினமும் குடிப்பதில் தப்பே இல்லை ...