வயிறு நோய்களுக்கு தீர்வு
வயிற்று புண்ணிற்கு வெண்பூசணிக்காய் சாறு குடித்து வந்தால் குணமாகும்.
வயிற்று வலி நீங்க உளுந்து மாவில் கூழ் செய்து சாப்பிடலாம்.
வயிற்று புண்ணிற்கு சீரகம், மணத்தக்காளி, பூசணிக்காய் சமையல் நல்ல மருந்து.
வயிற்று புண்ணை தடுக்க சூடான உணவு, குளிர்பானங்களை தவிர்க்கவும்.
வயிற்று வலிக்கு தண்ணீரில் சிறிது சுக்கு, பனங்கற்கண்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக முட்டைக்கோசை வேகவைத்த அந்த நீரை குடிக்கலாம்.
வயிற்று வலிக்கு மருந்து ஜாதிக்காயை உடைத்து அரைத்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
வயிற்றுப் பூச்சி புழு நீங்க பிரண்டை துவையல் நாள்தோறும் சாப்பிடலாம்.
வயிற்று நோய் எதுவானாலும் சீரகத்தை பொடி செய்து மோரில் கலந்து சாப்பிடலாம் .
வயிற்றுப்புண் குணமாக மணத் தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
குடல்புண் குணமாக அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
வயிற்றுப்புண் குணமாக நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வரலாம் .
சூட்டினால் வயிற்று வலியா? சீரகம், உப்பு நசுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.
வயிற்று வலி குணமாக ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி தேன் கலந்து குடிக்கலாம் .
வயிற்றுப் புண் குணமாக நாவல் பழம் கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டு வரவும் .
வயிற்றுப்புண் உள்ளவர்கள் உப்பு, காரம் ஊறுகாய் பால் உணவை அதிகமாக சாப்பிடக் கூடாது .
குடல் வலிமை பெற வில்வ பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிடலாம்.
வயிற்று வலிக்கு வெந்தயத்தை வாயில் மென்று மோர் குடிக்கலாம்.
பாகற்காய் விதையை அவிழ்த்து பாலுடன் கலந்து குடித்து வர வயிற்றுப் பூச்சி, புழுக்கள் ஒழியும்.
வெற்றிலை, ஓமம் இடித்து பிளந்து தேன் கலந்து பருக வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு குணமாகும்.