அழகை காக்கும் கடுகு
கடுகில் நம்மை அழகாகும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன .அவை என்னவென்று பார்ப்போம்:
அரிப்பு குணமாக
தலையில் தொடர்ந்து அரிப்பு பாெடுகினால் செதில் செதிலாக வெள்ளையாக உதிர்வது போன்றவை சிலருக்கு தொல்லையாக இருக்கும்.
அதற்கு கடுகு நல்ல மருந்தாகும்.
கடுகு எண்ணெயை ஆறு முதல் ஏழு சொட்டுகள் எடுத்து லேசாக சூடாக்கி அரிப்பு தோல் உதிரும் இடங்களில் அழுத்தி ஐந்து நிமிடம் மசாஜ் செய்வது போல் தேய்க்கவும் .
இப்படி செய்து வர அரிப்பு போய்விடும்.
ஒரு முறை செய்தாலே நல்ல குணம் தெரியும்.
இந்த எண்ணை தேய்த்தபிறகு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அப்படியேவும் விட்டு விடலாம்.
கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம் போக
கண்களுக்கு கீழே பை போன்ற வீக்கம் இருந்தால் அதற்கு கடுகை பொடி செய்து சலித்து எடுத்து அதை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து குழைத்து கண்களுக்கு கீழே தடவவும்.
தொடர்ந்து இதனை செய்து வர வீக்கம் குறைந்து கண்களுக்கும் பளிச்சிடும் சருமம்.
பயணத்தினால் ஏற்படும் தூசியாலும் அசுத்தமான காற்றினாலும் கருத்து பாதிக்கப்படும் சருமத்தை பளிச்சிட செய்ய கால் தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பு இவற்றை ஒரு தேக்கரண்டி தயிரில் கலந்து இரவு ஊற விட்டு மறுநாள் இதனை அரைத்து முகத்தில் பேஸ்ட் போல போட்டு சிறிது நேரம் ஊற விட்டு பின் குளிக்க கருத்த சருமம் பளிச்சிடும்.
வேண்டாத ரோமங்களை நீக்க
ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடலைமாவு, ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு இதை மூன்றையும் சேர்த்துக் குலைத்து வேண்டாத ரோமங்கள் உள்ள பகுதியில் தடவி பின் முழுமையாக காய்ந்து போகும் முன் தேய்த்து கழுவி வர வேண்டாத முடிகள் உதிர்ந்து அழகு கூடும்.
வரிகள் கோடுகள் மறைய
சிலருக்கு வயிற்றுப் பகுதியில் வரிகள் கோடுகள் போன்றவை இருக்கும்.
இதற்கு இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெயை சூடாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து வைக்கவும் .
கர்ப்ப காலத்தில் தினமும் இந்த எண்ணையை வயிற்றில் பரவலாக தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு குளிக்க சருமத்தில் இருக்கும் வரிகள் கோடுகள் மறையும்.