எந்த நேரத்தில் நடை பயிற்சி செய்யலாம்
மேடைப்பேச்சு ஆரோக்கியத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாகும்.
ஏனெனில் இது சில நோய்களை தடுப்பதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் உதவக் கூடும்.
பொதுவாக நடை பயிற்சி செய்ய அதிகாலை தான் சிறந்தது.
குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது நடக்க வேண்டும்.
சமமான பாதையில் நடப்பது நன்று.
ஓட்டமும், நடையுமாகவும் இல்லாமல் அதே சமயம் ஆமை போன்று ஊர்ந்து செல்லாமல், உடலில் வியர்வை வரும் வேகத்தில் நடப்பது நல்லது.
முடிந்தவரை தனியாக நடைபயிற்சியை மேற்கொள்ளாமல் இருவராக நடப்பது நல்லது.
தினமும் நடக்க தூண்டும் ஆர்வத்தையும் அது கொடுக்கும்.
காலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து நடப்பதற்கு முன் ஒரு முதல் இரண்டு லிட்டர் வரை தண்ணீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து , இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்து கொண்டு நடப்பது தான் நடைப்பயிற்சி செய்யும் முறை.
நடைபயிற்சியின் போது சிறிது தூரம் நடந்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் நடப்பது தவறானது.
குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
அது போன்ற இயற்கை சூழல் நிறைந்த இடங்களான கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் நடப்பது மிகவும் நல்லது.
காலையில் செய்யும் நடைபயிற்சி அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
இதனால் அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடனும் செய்ய முடியும்.
மேலும் சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது.
நடக்கும்போது பேசிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக்கொண்டே நடக்கக்கூடாது.
மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும்.
நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.
நடந்து வந்த உடன் சிறிது நேரம் குனிந்து நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் நல்லது.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகம் சேர்வது, உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
அப்படிப்பட்ட உடலில் சேரும் கொழுப்பை எரிப்பதற்கு நடை பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே மிதமான நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது .
நடைப்பயிற்சிக்கு முன்னோட்டமாக வார்ம் அப் எனப்படும் பயிற்சியை மேற்கொள்ளலாம் .
நடைப்பயிற்சி எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பது அவரவர் வசதிக்கு ஏற்றது .
குறைந்த அளவாக அரை மணி நேரம் முதல் அதிக அளவில் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரை தினம் தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் .
இதனை காலை மற்றும் மாலை வேலை என பிரித்து கூட நடக்கலாம்.