கோதுமை புல் வளர்ப்போம்

கோதுமை புல்
கோதுமைப்புல் வீட்டிலேயே வளர்க்கலாம்.

 நல்ல தரமுள்ள கோதுமை ஒரு பிடி எடுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற போடவும்.

 பெரிய தட்டில் மண்ணை பரப்பி முளைவிட்டு கோதுமையை தனித்தனியாக மண்ணில் புதைத்து லேசாக மண்ணுக்குள் அமுக்கி விடவும்.

 மூன்று நாள் வீட்டில் உள்ளேயே வைத்து நான்காம் நாள் வெயிலில் வைக்கவும்.

 ஏழு அல்லது எட்டு நாளில் புல் 10 முதல் 15 அங்குலம் வரை வளரும்.

 இது அழகுக்குதான் மட்டுமல்லாமல் உணவாகவும் பயன்படுத்தலாம்.

இந்த கோதுமை புல்லில் ஏகப்பட்ட உயிர் சத்துக்கள் உள்ளன.

 அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, பி,சி,இ மற்றும் கே, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னிசியம், சோடியம், கந்தகம் என பல சத்துக்கள் உள்ளன.

 இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிவப்பு  அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

 தேனுடன் இந்த சாற்றை கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.

 இதை தண்ணீரில் போட்டு குளித்தால் தோல் மிருதுவாகும்.

 கோதுமை சாறு சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
காயங்களை ஆற்றும் சக்தி கொண்டது.

 சட்டினி, சூப் செய்யலாம். கொத்தமல்லி மாதிரி ரசத்திலும் போடலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை