பூச்செடியாகும் காகிதம்....

ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பங்கள் சிறந்தவை மற்றும் துல்லியமானவை என்பதை உலகம் அறியும் .

ஜப்பானின் நாளிதழான தி மைனீச்சி (The Mainichi) நிறுவனம் தனது செய்தித்தாள்களிலிருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை தயாரித்தது.

 இந்த செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதிலிருந்து சிறிய தாவரங்கள் வளர தொடங்கும்.

 செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கிவிடும்.

 முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில் மலர் செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்க்கு செல்கிறது.

 மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைப்படக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களைக் கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது.

 காய்கறிகள் மற்றும் பழங்கள் சுற்று சூழலையும் மாசு படுத்தாமல் இருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகிறது .
இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.

ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்கான அச்சிடப்படும் இந்த நாளிதழ்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும் இயற்கை வளத்தை காப்பது பற்றியும் மரத்தை வளர்ப்பதில் அவசியத்தை உணர்த்தவும் பயன்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை