தையல் கலை

தையல் கலை

நூலை சுலபமாக ஊசியில் கோர்க்க சிறிய துளைக்குள் காய்ந்த சோப்பு கட்டி மீது தேய்த்து விட்டு ஊசியில் கோர்க்க வேண்டும்.

 பாபின்கள் துருப்பிடிக்காமல் இருக்க அதன் உள் மற்றும் வெளிப்பக்கமும் லேசாக நெயில் பாலிஸை தடவலாம். நூலும் சிக்காது .

கத்திரிக்கோல் மழுங்கி விட்டால் உப்பு காகிதத்தை பலமுறை கத்திரிக்கோலால் கத்தரித்தால் கூர்மை பெற்றுவிடும் .

தையல் சாமான்களை வைக்கும் பெட்டியில் ஒரு சிறிய மேக்னெட்டை வைக்க வேண்டும். ஊசி ஊக்கு போன்றவை மேசை தரையிலோ சோபா மீது விழுந்து விட்டால் சுலபமாக எடுக்கலாம்.

 வெள்ளை துணிக்கு எம்ப்ராய்டு செய்யும் போது கைகள் வியர்த்து துணியை அழுக்காக்கி விடும். அதனால் கை விரல்களில் சிறிது டால்கம் பவுடரை தூவிக் கொள்ள வேண்டும்.

 மிக லேசான துணியை தையல் மிஷினில் தைக்கும் போது சுருக்கம் இன்றி தைக்க துணையின் அடிப்பகுதியில் ஒரு மெல்லிய பேப்பரை வைக்கலாம்.

 தையல் இயந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துவது தான் நல்லது. அப்படி முடிய வில்லை என்றால் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது மெஷினை நன்றாக சுத்தம் செய்து எண்ணெய் விட்டு பெடல் பண்ண வேண்டும். இதனால் மெஷின் நீண்ட காலம் உழைக்கும்.

 தையல் மிஷினில் உள்ள பெல்ட் நீளமாக இருந்தால் அதனை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் வெயிலில் காய வைத்தால் சரியாகிவிடும் .

நீண்ட நேரம் தைக்க வேண்டியிருந்தால் கையை ஒரு சிறிய குஷன் தலையின் மேல் வைத்துக்கொண்டு தையுங்கள். அவ்வப்போது மரங்களையோ, ஜன்னல்களையோ பார்த்துக் கொண்டால் கண்கள் களைப்படையாது.

 ஆடைகளில் ஜிப் வைத்து தைப்பதற்கு முன் சேலாேபோன் டேப்பை கொண்டு ஒட்டி விட்டு பின்னர் தைக்கலாம்.

 முனை முழுங்கிய ஊசியை தையல் பிரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

 பட்டன்கள் தைப்பதற்கு முன் தைக்க வேண்டிய இடத்தில் சிறிது நகப் பூச்சை தடவி அதன் மேல் பட்டனை தேய்த்து விட்டால் எளிதில் அந்து வராது.

 சட்டைகளில் உள்ள பட்டனை பிரிக்க சீப்பை பட்டனின் அடியில் வைத்து பின் கத்தரிக்கவும்.

 எண்ணெய் போட்ட பின்பு ஒரு துண்டு துணியில் சிறிது நேரம் தைத்து உபயோகப்படுத்தவும் .

உபயாேகம் செய்த பின் இயந்திரத்தை மூடி வைக்கவும்.
 தையல் மிஷினை துணி போட்டு மூடி வைத்து தூசி வராமல் பாதுகாக்க பளிச்சிடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை