கை நடுக்கம், உடல் நடுக்கம் காரணம் அறிவோம்

கை நடுக்கம் உடல் நடுக்கம் காரணம் அறிவோம்

மருந்துகளால் நடுக்கம் 

Terbutaline, salbutanol, theophylline போன்றவை முக்கியமானவை. இம்மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன.

 இதனால் பல இருமல் சிறப்பு மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளனர்.

 ஸ்ரோயிட் வகை மருந்துகள் பல வகையாகும்.

 இதை பல வகை நோய்களுக்கும் உபயோகப்படுவதுண்டு.

 இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்.

 மருத்துவ ஆலோசனையின்றி தானாகவே மருந்தை வாங்கி குடித்தால் அவரைப் போல பலருக்கும் நடுக்கம் ஏற்படுவது உண்டு.

 வலிப்பு நோய்க்கு உபயோகிக்கும் Valporate, மனநோயாளிகளுக்கு உபயோகிக்கும் Lithium, மனசோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள் சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவது உண்டு .

பார்க்கின்சன் 
நோய்க்கு நடுக்கம் ஏற்படும் அதேபோல அந்த நோய்க்கு உபயோகிக்கும் Levodopa அருந்துதாலும் ஏற்படலாம்.

 தைராக்ஸின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம் ..

தைராய்டு சுரப்பி 

அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருவதுண்டு.

 இன்னும் பல மருந்துகளால் நடக்கும் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலையும் மருத்துவமனிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 போதையும் நடுக்கமும் 

போதை பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்.

 முக்கியமாக மதுபானமும், புகைத்தலும் நடுக்கம் ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

 அதேபோல போதையில் மூழ்கியவர் அதை திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.

 நிறுத்தும்போது நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்து விடும்.

 சிகிச்சைக்காக  நடுக்கம் கண்டால் அதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிய வேண்டும் .

எனவே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

 பெரும்பாலான காரணங்களை விரிவாகவும், தெளிவாகவும் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும்.

 இருந்த போதும் ரத்த பரிசோதனைகள் மற்றும் சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ போன்றவையும் தேவைப்படலாம்.

 மருந்துகள் காரணமாயின் அவற்றை இனம் கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும் .

போதை பொருட்கள் காரணமாகி அவற்றை நிறுத்த வேண்டும்.

 மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். 

அவ்வாறு குடிப்பது ஆபத்தானது.

 அவர்கள் மதிவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது உண்டு.

 பெரும் பிரச்சனையாகும்.

 நடுக்கம் உள்ளவர்கள் காபி, தேநீர், கொக்கோ போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

 அரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.
 எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடைய தேவையில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை