மாதுளம், நலன் தரும் மருத்துவம்

மாதுளை, நிபந்தனை அற்ற பயன்
 பழங்களிலேயே பழமையான பழம் மாதுளை பழம்

720 வகை மாதுளைகள் உள்ளன.

பெயர்கள்
 மருத்துவ குணங்களும், அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்ட மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள் என்ன பெயர்கள் உண்டு.

 மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயராகும்.

 இதன் தாவரப் பெயர் பியுனிகா கிரனேட்டம் ஆகும்.

சத்துகள்
100 கிராம் மாதுளையில் கலாேரி 83%, வைட்டமின் சி 17%, வைட்டமின் கே 14%, கார்போஹைட்ரேட் 14 %, புரதச்சத்து 14%, பொட்டாசியம் 6%, இரும்புச்சத்து 4%,  மக்னிசியம் 3% , கொழுப்பு 1%, நார்ச்சத்து 16% ஆகியவை உள்ளன.


மருத்துவ குணம் 

 மாதுளையில் உள்ள பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

 உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்னும் தனிமம் குறையும் போது மன அழுத்தம் ஏற்படும்.

 மாதுளை நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

 இதை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.

 மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜனில் உற்பத்தி குறைந்து மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் அதிகரிக்கும் காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம் பல ஜூஸ் குடிக்கலாம்.

 அது உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டும்.

 எலும்புகள் வலுப்பெற உதவும்.

 மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.

 செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடல் எடை குறைவதற்கும், டைப் இரண்டு வகை சர்க்கரை நோயை குறைப்பதற்கு துணை புரியும்.

 கருவுற்ற பெண்கள் தினமும் மாதுளம் பழச்சாறு குடித்து வர குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

 உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

 மாதுளம் ,இலை ,விதைகள் நம் தோள்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்கும் சக்தி கொண்டவை .

மாதுளம் பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும்.

 தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டும் .

இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றும் '

மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் சூரிய வெப்பத்தால் தோள்களில் ஏற்படும் கருமையையும் ,தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

 தினமும் மாதுளம் சாப்பிட்டால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாகும்.

 அல்சைமர் மற்றும் மூளை கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

 மாதுளம் விதைகள் நம் தோள்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்கும் சக்தி கொண்டவை.

 மாதுளம் பழத்தை சாப்பிடுவதாலும், அதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை காயங்களின் மீது தடவுவதாலும், காயம் விரைவில் குணமாகும் .

அத்துடன் தழும்புகளும் மறையும்.

 மாதுளம் பழத்தை உண்பதால் ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழியும்.

தினமும் 100 மில்லி மாதுளம் பழச்சாற்றைப் பருகி வந்தால் ரத்த நாளங்கள் தளர்வடைந்து அதிக அளவில் ஆக்சிஜனை கொண்ட ரத்தம் இதயத்திற்கு சென்று இதயம் பலம் பெறும் .

நீண்ட நாள் உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் இந்த படத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பழைய தெம்பு கிடைத்துவிடும்.

 வயோதிக தன்மையை தள்ளிப் போடும்.

 பெரும்பாலான ஆன்டி ஏஜிங் சீரம் மாதுளம் பழத்தின் கொட்டைகளில் இருந்து தான் தயாராகிறது,

பழமாக சாப்பிடும்போது அதைவிட அதிக பலன்கள் கிடைக்கும்.

 தொடர்ந்து இரண்டு வாரங்கள் மாதுளம் பழச்சாற்றை அருந்தினால் ரத்த அழுத்தம் குறையும் ,

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் மாதுளைகளை சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி , உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
 மாதுளம் பழத்தைப் போலவே மாதுளம் பூவிலும் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பர சொல்லிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன . மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும் ரத்த சோகை குறையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை