சொந்தத்தில் திருமணம் வேண்டாமே!

சொந்தத்தில் திருமணம் செய்யலாமா?
 இரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் 

குராேமாேசாேம்கள்

 நம் உருவம் நிறம், பாத அமைப்பு, இதயத்துடிப்பு ,நகம், உணர்ச்சி உட்பட நம் உடலை குராேமோ சொம்புகள்தான் முடிவு செய்கின்றன.

 எப்போது இறப்பும் என்பதையும் இவைதான் தீர்மானிக்கின்றன .

நம் உடல் செல்களால் ஆனது. அந்த செல்களின் நியூக்ளியஸ் உள்ளே இருக்கிறது.

 குரோமோசோம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன.

 23 குராேமோசம்கள் அப்பாவிடம் இருந்தும், 23 குரோமோசோம் அம்மாவிடமிருந்தும் வருகின்றன.

 அதனால்தான் உருவ அமைப்பு பழக்க வழக்கங்களில் பெற்றோர் போலவே குழந்தைகளும் உள்ளனர்.

 அது போலதான் பெற்றோர் உடல் நலப் பிரச்சினைகளும், குழந்தைகளுக்கு வருகின்றன.

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருக்கும் என்பதால் அத்தகையூருக்கு பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்பு அதிகம்.

 அதே நேரத்தில் நெருங்கிய சொந்தமின்றி வெளியே இருந்து திருமணம் செய்வதால் புதுவகையான குரோமோசோம்கள் இருக்கும்.

பிரச்சனைகள்

 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கான வாய்ப்பு குறைவு.

 தலைமுறை தலைமுறையாக சொந்தத்திலேயே திருமணம் செய்யும்போது ஹீமோபீலியா, தாலசீமியாபோன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

 அடிபட்டு ரத்தம் வெளியாகும் போது மூன்று நிமிடங்களில் ரத்தம் உறைய வேண்டும் .

சொந்தத்தில் திருமணம் செய்தால் ரத்தம் உறையும் தன்மையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 மேலும் சொந்தத்தில் திருமணம் செய்யும்போது ஒரே மாதிரியான மரபணுக்கள் தான் இருவருக்கும் இருக்கும்.

 அதனால் மரபணு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது .

சர்க்கரை நோய் ,புற்றுநோய், இதய நோய் போன்றவை இப்படித்தான் வழிவழியாக வருகின்றன.

 கண் பார்வை குறைபாடு, தசை மாறுதல் பிரச்சனை, உயர வளர்ச்சி குறைபாடு ,பருவம் அடையாமல் இருப்பது ,திருநங்கையாக பிறப்பது எல்லாமே குரோமோசோம் பிரச்சனை தான் .

அதுபோல் சொந்தத்தில் திருமணம் செய்வதால் இன்பார்ன் எரர், மெட்டபாலிசம் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
 இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளால் தாய்ப்பாலைக் கூட குடிக்க முடியாத பிரச்சினை ஏற்படும்.

 எனவே அத்தை மகள், மாமன் மகன், திருமணம் செய்யக்கூடாது .

அதே நேரத்தில் சொந்தத்தில் திருமணம் செய்தாலும் சிலருக்கு பிரச்சனை இல்லாமல் நல்ல குழந்தைகளாக பிறக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் மரபணுக்களில் குறைபாடு இல்லாமல் இருப்பதுதான்.

கருத்துரையிடுக

புதியது பழையவை