உணவே மருந்து

உணவே மருந்து 
வெண்ணெயுடன் காய்கறிகள், இறைச்சி சாப்பிடக்கூடாது.

 உடலில் சிலருக்கு அலர்ஜி உண்டாகும்.

 வாழைப்பழத்தை மோர், தயிர், பனம்பழம் இவற்றுடன் சாப்பிடக்கூடாது.

 முள்ளங்கி, பதங்கீரை வகைகள் இவற்றை உட்கொண்டு பாலை குடிக்க கூடாது.

 இவையும் தோல் அலர்ஜியை உருவாக்கும் .

கண்களில் தீப்பொறி பட்டு விட்டால் தாய்ப்பால் அல்லது விளக்கெண்ணையை சில சொட்டுகள் விட்டால் நலமாகும்.

 தயிரை உடம்பில் தேய்த்து குளித்தால் வியர் குரு போய்விடும்.

 வெந்தயத்தை வேக வைத்து கடைந்து தேன் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

 செம்பருத்தி இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.

 பச்சை கொத்தமல்லி இலைகளை மிக்ஸியில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்தால் தலைவலி குணமாகும் .

வெற்றியிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து வாயில் போட்டுக் கொண்டால் கால்சியம் சத்து, இரும்பு சத்தும் உடலில் சேரும்.

 பீர்க்கங்காய் இலையை தேய்த்து குளித்தால் தோல் தொடர்பான நோய்கள் வராது.

 இரண்டு டீஸ்பூன் கருவேப்பிலையின் சாரை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம்  நீங்கும்.

 தண்ணீரில் 25 கிராம் சீரகம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கபம் நீங்கும் .
அல்சர் இருப்பவர்களுக்கு முட்டைக்கோஸ் நல்ல உணவு மருந்து.

கருத்துரையிடுக

புதியது பழையவை