வாழையின் பயன்கள்

வாழையின் பயன்கள்

 பச்சை வாழை குளிர்ச்சியை கொடுக்கும்.

 ரஸ்தாலி வாழைப்பழம் உடலுக்கு உரமூட்டும் .

பேயன் வாழைப்பழம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

 நேந்திரம் வாழைப்பழம் இரும்பு சத்து தரும்.

 மலை வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும்.

 கற்பூர வாழைப்பழம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

 செவ்வாழைப்பழம் உயிரணுக்களை பெருக்கும்.

 மஞ்சள் வாழைப்பழம் குடற் புண்களை ஆற்றும் .

மொந்தன் வாழைப்பழம் உடல் வறட்சியை போக்கும் .

வாழையிலை இலை குருத்தை பறித்து தீ புண் மீது வைத்து கட்டினால் புண் விரைவில் ஆறும்.

 குருத்தை சாப்பிட்டால் முடி நரைக்காது .முகம் பளபளப்பாகும்.

 வாழைப்பூ இதை சமைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், பித்தம், ஆசன கடுப்பு, எரிச்சல் நீங்கும். தாது விருத்தியை பெருக்கும் .

வாழை பிஞ்சு அதிமூத்திரம் , ரத்த மூலம், அடிவயிறு ரணத்தை குணமாக்கும் .

வாழைக்காய் ரத்த விருத்தியை உண்டாக்கும்.

 உஷ்ண இருமல் , பித்த வாந்தி, வாயில் நீர் ஊறுதல் நீக்கி பசியை அதிகரிக்கும்.

 வாழை பட்டை வாழை பட்டையால் பெட்டி செய்து அதில் அபூர்வ மூலிகைகளை சேமித்து வைப்பார்கள்.

 வாழை பட்டையின் சாறு இரண்டு அம்ஸ் சாப்பிட்டால் போதையினால் ஏற்பட்ட மயக்கம் தீரும் .

வாழைத்தண்டு 
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை