முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?

முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?
 காய்கறிகள், பழங்கள், மீதமாகும் உணவுப் பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் என பலவகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் குளிர்சாதன பெட்டியில் தான் அடித்து வைக்கின்றோம்.

 அந்த வகையில் முக்கிய இடம் பிடித்திருப்பது பால் மற்றும் முட்டை இவை இரண்டையும் வைப்பதற்கு கிடைத்த வரமாகவே குளிர்சாதன பெட்டியை பார்க்கிறோம்.

 அதற்காகவே பால், முட்டை வைப்பதற்கு என்று தனி ஒதுக்கீடும் குளிர்சாதன பெட்டியில் உண்டு.

 ஏனென்றால் குளிர்சாதன பெட்டியில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் .

இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் மூன்று முதல் நான்கு நாட்களில் கெட்டுவிடும் எனவே தான் முட்டையை பெரும்பாலும் வாங்கி வந்த உடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகிறோம்.

 ஆனால் முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா? என்பதை பற்றி நாம் அறியாமலேயே பிரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம் .

ஆனால் உண்மையில் முட்டைகளை குளிர்சாதன பெட்டிக்குள் வைப்பது மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 ஏனென்றால் முட்டையின் மேல் ஓடுகளில் சல்மாேனெல்லா என்ற பாக்டீரியாக்கள் படிந்து இருக்கும்.

 இந்த சால்மோனெல்லா பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழக்கூடிய ஒரு வகையான நல்ல பாக்டீரியா ஆகும்.

 ஆனால் இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும்.

 இவை முட்டையின் மேல் ஓட்டிலும் உட்பகுதியிலும் இருக்குமாம்.

 உள்ளிருக்கும் பாக்டீரியா முட்டையை நாம் வேக வைத்தோ ? பொறித்தோ ? சாப்பிடும் போது அந்த சூட்டில் இறந்துவிடும்.

 அதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

 ஆனால் முட்டை மேலோட்டில் படிந்து இருக்கும் இந்த பாக்டீரியா பயன்படுத்தும் வரை உயிரோடு தான் இருக்கும்.

 அதுபோன்று சாதாரண அறையின் தட்பவெப்ப நிலையில் இருக்கும் போது இந்த பாக்டீரியாவால் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை.

 ஆகவே குளிர்ந்த ஈரப்பதம் மிக்க தட்பவெப்ப நிலையில் இந்த சால்மாேனெல்லா பல மடங்கு பெருக்கம் அடைகிறது.

 எனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து உடனே சமைக்கும் போது இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

 குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
 எனவே முட்டையை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்த்து விடுவதே சிறந்தது.

1 கருத்துகள்

புதியது பழையவை