உலகின் ஒரே மிதக்கும் பூங்கா
உலகின் ஒரே மிதக்கும் பூங்கா எங்கு இருக்கிறது தெரியுமா?
நம் நாட்டில் தான் .
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா தான் அது.
இந்த பூங்கா உலகின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும் .
இது மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாேக்டாக் ஏரியில் அமைந்துள்ளது.
இந்தப் பூங்கா மண் கரிம பொருட்கள், தாவரங்கள் மற்றும் மிதக்கும் உயிரிகளால் உருவானது.
இங்கு நீர்மட்டம் மாறும்போது இந்த உயிர்களும் மாறிவிடும்.
மிதக்கும் வாழிடம் இது.
விலங்குகளின் மேய்ச்சல் நிலமாகவும், நீர்வாழ்த் தாவரங்கள் மற்றும் மீன்களுக்கான இல்லமாகவும் செயல்படுகிறது.
கைபுல் லாம்ஜாவோ சங்காய் என்ற அரிய வகை மானின் கடைசி இயற்கை வாழிடமாகவும் உள்ளது .
இந்த மான் இனம் அழிந்து வரும் இனமாக கருதப்படுகிறது.
நடனமாடும் மான் என்றும் அழைக்கப்படும் இந்த மான்கள் மிதக்கும் தாவரங்களில் தாவி செல்லும்போது அது பார்ப்பதற்கு நடனமாடுவது போல் இருக்கும்.
இதனால் இந்த மான்கள் நடனமாடும் மான்கள் என்று அழைக்கப்படுகின்றன .