ஏடிஎம் மூலம் செய்யக்கூடிய எட்டு விஷயங்கள்
1. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்க்க வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை.
ஏடிஎம்மில் பேலன்ஸ் பார்க்கலாம். மினி ஸ்டேட்மென்ட் மூலம் உங்களின் கடைசி சில பரிவர்த்தனைகளையும் சரி பார்க்கலாம்.
2. இனிய மோசடிகளை தவிர்க்க உங்கள் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவது நல்லது .
ஏடிஎம்மிற்கு சென்று அதை செய்யலாம் .
3. ஏடிஎம் மூலமே ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி இருக்கு பணத்தை மாற்றலாம்.
பணத்தை எடுப்பது போலவே பணத்தை செலுத்தவும் ஏடிஎம் மையத்தை பயன்படுத்தலாம் .
அதே போல செக்குகளை டெபாசிட் செய்யும் வசதியும் பல ஏடிஎம்களில் உள்ளது .
4. ஆயுள் காப்பீட்டு பிரிமியம் செலுத்த வேண்டும் என்றால் அந்தப் பணியை ஏடிஎம் மூலம் எளிதாக செய்ய முடியும்.
5. இதே போல மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தரும் .
டெர்ம் டெபாசிட், பிக்சட் டெபாசிட், முதலீடுகள் போன்றுவற்றையும் இங்கு செய்ய முடியும்.
6. வங்கி காசோலைத் தாள்கள் காலியாகி விட்டால் புதிய காசோலை புத்தகத்தைப் பெற ஏடிஎம்மில் விண்ணப்பிக்கலாம் .
7. கேஸ் சிலிண்டர், மின்சார கட்டணம் என ஏடிஎம்மில் எந்த ஒரு பயன்பாட்டு பில்களையும் நீங்கள் எளிதாக செலுத்தலாம். ஆனால் இதற்காக நீங்கள் வங்கியின் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் .
8.உங்கள் ஆதார் விவரங்களை வங்கி கணக்குகளுடன் இணைக்க ஏடிஎம் சேவை உதவுகிறது.