வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கு

வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கு
 வேலைக்கு போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

 கருவுக்கு அவ்வப்போது தேவையான போசாக்கான ஆகாரம் கொடுக்க வேண்டும்.

 டைல்ஸ் தரையில் கவனத்துடன் மெதுவாக நடக்க வேண்டும்.

 வேகமாக நடந்து வழுக்கி விழுந்தால் சிக்கல்தான் .

அலுவலகத்தில் தரைத்தளம் என்றால் சிக்கல் இல்லை ,அதுவே மாடிப்படி என்றால் கூடுதல் கவனம் தேவை.

 மாடிப்படி ஏற கஷ்டமாக இருந்தால் லிப்ட் பயன்படுத்தலாம்.

 வேலை நேரத்தில் இடை இடையே சத்தான பழங்கள் காய்கறி சாலட்டுகளை சாப்பிடலாம் .

ஜூஸ் பருகலாம்.

 இது பணியில் சோர்வை போக்குவதோடு குழந்தைகளுக்கும் கர்ப்பிணிக்குமான சரிவிகித சத்துக்களை நிலை நிறுத்தும்.

 காபியில் உள்ள காபின் குழந்தைகளுக்கு ஆகாது .எனவே காபியை தவிர்த்து ஆரோக்கியமான பானங்களை பருகலாம் .

கர்ப்பம் உறுதியானவுடன் பயப்படாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

 காலையில் ஏற்படும் சோர்வு அலர்ஜியை கண்டு துவண்டு விடக்கூடாது.

 கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்.

 சங்கடப்பட்டு அடக்கி வைத்தால் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும்.

 ஒரே வேலைக்கான உணவை மட்டும் எடுத்துச் செல்லாமல் பிஸ்கட், பழங்கள், கஞ்சி போன்றவற்றை எடுத்துச் சென்றால் திடீர் பசிக்கு கை கொடுப்பதுடன் சோர்வு ஏற்படாமலும் இருக்கும் .

 வயிற்றை அழுத்தாத உடைகளை அணியவும் .

முடிந்தவரை பருத்தி ஆடைகளையே அணியவும்.

 கையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும்.

 அதிக நேரம் கால்களை தொங்கவிடாமல் ஒரு மணிக்கு ஒரு முறை கால்களை நீட்டி பத்து நிமிடங்கள் வைக்கவும்.

 அதிக நேரம் உட்காராமல் ஐந்து நிமிடங்கள் நடந்து விட்டு மீண்டும் வேலைகளில் ஈடுபடலாம் .

ஹில்ஸ் போன்ற காலணிகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஷூ, பிளாட் செருப்புகளை அணியவும்.

 இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

 கண் விழித்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும் பெண்கள் அதற்கு ஏற்றவாறு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் .
வேலையில் இருந்து எப்போது விடுப்பு எடுத்துக் கொள்வது எப்போது மீண்டும் சேர்வது என்பது போன்ற விஷயங்களை முன்கூட்டியே ஆலோசித்துக் கொள்ளவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை