பொடுகு தொல்லையா? கவலையை விடுங்க
குளிர்காலம் அல்லது வெயில் காலம் எதுவானாலும் முதலில் பிரச்சனைக்குள்ளாவது தலை சருமம்தான் .
அதீத குளிரும் சரி, அதீத வெயிலும் சரி தலையில் பொடுகு தொல்லையை உண்டு பண்ணும் .
குறிப்பாக குளிர்காலத்தில் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பெரிய தலைவலியாகவே இருப்பது இந்த தலை சரும பொடுகு தான்.
வீட்டிலேயே இருக்கும் சில பொருட்கள் கொண்டு எப்படி பொடுகை விரட்டலாம் இதோ சில டிப்ஸ்:
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும் .
பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.
தலையில் தயிர் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளிக்க பொடுகு நீங்கும் .
வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணையில் நன்றாக கறுக்க வறுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
ஆப்பிள் சாறுடன் அரைக்கப் நீர் கலந்து தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்து வர பொடுகு நீங்கும்.
சின்ன வெங்காயத்தை உரித்து அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வெள்ளை மிளகு, வெந்தயம் இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான சூடு நீரில் குளித்து வர பொடுகு நீங்கும்.
சுடுநீரில் கருவேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
செம்பருத்திப்பூ, தயிர், மிளகு எண்ணெயில் கலந்து தலையில் மசாஜ் செய்தாலும் பொடுகு நீங்கும்.
கற்றாழை சாரை தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.