சளி, இருமலை எப்படி விரட்டுவது?

சளி, இருமலை எப்படி விரட்டுவது?

 குளிர்காலம் வந்துவிட்டாலே போதும் சளியும், இரும்பலும் கும்மாளம் போடும் .

ஆனால் இன்றைய சூழலில் எந்த காலத்திலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

 இருமல், சளி வர காரணங்கள் வெப்பநிலை குறைதல், தூசிகளை சுவாசித்தல், சரியான காற்றோட்டம் இல்லாத அறைகளில் வசித்தல், செரிமான குறைபாடுகள் என்று பல காரணங்களை முன் வைக்கலாம்.

 சளி இருமலை தடுக்க என்ன செய்யலாம் 

நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க வேண்டும்.

 தலை, தொண்டை , மார்பு, பாதங்கள் ஆகிவற்றை வெப்பமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு நாளைக்கு ஒருமுறை சூடான தேநீர் அருந்துவது நல்லது.

 காபி சாப்பிடலாமா ? தேநீரைப் போல இரண்டு முறை அருந்தலாம் .

சூடான வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி சுத்தமான தேனும், எலுமிச்சை சாறும் சேர்த்து குடிப்பது நல்லது .

சீரகம், கரு மிளகு, கொத்தமல்லி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 ஆவி பிடிப்பது நல்லது.

 சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணையை ஊற்றி அதில் இருந்து வரும் ஆவியை சுவாசித்தால் மூக்கடைப்பு நீங்கி சுவாசிப்பது எளிதாகும்.

 துளசி இலைகளை போடுங்கள். கொதிக்கின்ற நீரில் ஓமவள்ளி, புதினா , துளசி இலை போடுங்கள். அத்துடன் மூன்று லவங்க பூக்களை போடுங்கள். சிறிதளவு லவங்கப்பட்டையை போடுங்கள் .நீர் உள்ள பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி ஆவி பிடியுங்கள். இறுகிய சளி அனைத்தும் வெளியே வந்துவிடும்.

 சூடான நீரில் உப்பு சேர்த்து அதனை சுவாசித்தால் தலையில் உள்ள பாரம் குறையும்.

 சூடான நீரை சுவாசித்தாலேயே சைனீஸ் சம்பந்தப்பட்ட வழிகள் அனைத்தும் விரைவில் மறையும்.

 வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து இதமான சூட்டில் குளிக்க வேண்டும்.

 குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் சூடான நல்லெண்ணையை தேய்த்து குளிக்க வேண்டும் .

பொதுவாக குளிர் காலத்தில் வியர்வை வெளியேறாது . ஆகவே உடற்பயிற்சி செய்வது நல்லது.

 லவங்க பட்டை, மிளகு மற்றும் தேன் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை வலி நீங்கும்.

 சீரகத்தை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் நீங்கும் .

இதயத்தையும் சுத்தப்படுத்தும்.
 எனவே காய்ச்சிய நீரில் கொஞ்சம் சீரகத்தை போட்டு குடியுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை