வீட்டு மருத்துவம்

வீட்டு மருத்துவம்

நார்த்தை இலைகளை கசாயம் விட்டு குடித்து வர காய்ச்சல் குணமாகும்.

 அதிகாலையில் வேப்பந்தளிர்களை சிறிதளவு உண்டு வர பித்த நோய்கள் குணமாகும்.

 கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும் .

காசினிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

 வெந்தயத்தை நன்றாக அரைத்து தயிரில் கலந்து உண்ண வயிற்று கடுப்பு மறையும் .

சிறிய வெங்காயத்தை அரைத்து பாதத்தின் அடிப்பகுதியில் பூசினால் தலைவலி குறையும் .

நாள்தோறும் 10 கருவேப்பிலைகளை மென்று தின்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 ஒரு டம்ளர் மாேரில் எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து அருந்தி வர ரத்த அழுத்த நோய் குணமாகும்.

 நாள்தோறும் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும்.
 இலந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை