எண்ணெய் பசை சருமமா?

எண்ணெய் பசை சருமமா?

 கவலை வேண்டாம் 

நம் முகம் பளிச்சென்று எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம் .

எண்ணெ வடியும் சருமம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள்.

 மேக்கப் செய்தாலும் பயனற்று போகிறது .

சீபம் எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது.

 சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும் அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றி விடும் .

அதிலும் கோடை எண்ணெய் பசை சருமம் எனில் வியர்வையுடன் இணைந்து மேலும் சருமத்தை பிசுபிசுவுடன் மாற்றி சர்வ துவாரங்களில் அழுக்கு சேர காரணமாகிவிடும் .

இதோ சில இலகுவான இயற்கை மாஸ்க் :

வெள்ளரி , ஒரு முட்டையின் வெள்ளை கரு, எலுமிச்சை - ஒரு டீஸ்பூன்
புதினா , இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பிரகாசம் ஆகும்.

 மேலும் எண்ணெய் பசை இன்றி புத்துணர்ச்சியான தோற்றம் கிடைக்கும்.

 நாட்டு மருந்து கடைகளில் சின்ன கட்டையாக அல்லது பவுடராக கிடைக்கும் சந்தனத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பூசி வர தேவையற்ற எண்ணெய் பசையை நீக்கி முகத்தை புத்துணர்வாக மாற்றும்.

 ஆப்பிளை சுத்தம் செய்து விதைகளை நீக்கி அதனுடன் தேன் கலந்து மசித்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பொலிவு பெறும்.

 அதனுடன் மிதமான சூட்டில் வெந்நீர் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகத்தில் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி எண்ணெய் பசை கட்டுப்படும்.

 வெறும் தேனை முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் பளிச்சு முகம் கிடைக்கும் .
இதனை தினமும் செய்யலாம் முடிந்தவரை இயற்கையான தேன் பயன்படுத்தவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை