கருவேப்பிலையின் பயன்கள்

கருவேப்பிலையின் பயன்கள்
கருவேப்பிலையில் உள்ள கோயினிகள் என்ற வேதிப்பொருள் தான் கருவேப்பிலைக்கு மணம் தருகிறது.

 கருவேப்பிலை உடலுக்கு பலன் தரும்.

 பசியை தூண்டும்.

 பித்தம் தணிக்கும் .

உடல் சூட்டை ஆற்றும்.

 மனதுக்கு உற்சாகம் தரும்.

 பார்வை கோளாறுகள் வராது.

 எலும்பை உறுதியாக்கும் .

ரத்த சோக ஏற்படாது .

வாய், வயிற்றுப் புண்களை ஆற்றும்.

 கைப்பிடி கருவேப்பிலையுடன் இஞ்சி, பூண்டு , சின்ன வெங்காயம், சீரகம், புதினா போன்றவற்றை வதக்கி துவையலாக்கி இதில் எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும்.

 இது உடலை புத்துணர்வாக்கும்.

 ஞாபக சக்தியை அதிகரிக்கும் .

மன இறுக்கத்தை மாற்றும்.

 கருவேப்பிலையை கழுவி லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும் .

இதை காலை வெறும் வயிற்றில் அப்படியே விழுங்கி வெந்நீர் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும் .

கருவேப்பிலையுடன் கற்றாழையும், மருந்தாணியும் சம அளவு கலந்து எண்ணெயில் போட்டு காய்ச்சவும்.

 இந்த எண்ணையை வடிகட்டி தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.

 இதை  காயவைத்து முடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதை தலையில் தேய்த்து வர இளநரை பிரச்சனை தீரும் .

காய வைத்த கருவேப்பிலையுடன் சம அளவு சர்க்கரை சேர்த்துப் பாெடித்து இதை காலையிலும் மாலையிலும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வர வாயு தொல்லை பிரச்சனை தீரும் .
நீரழிவு நோயாளிகள் உணவில் நிறைய கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள அவர்களுக்கு ஏற்படும் கைகால்  வலி, மயக்கம், பார்வை கோளாறு போன்ற பக்க விளைவுகள் தவிர்க்கப்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை