முகப்பருவா? கவலை வேண்டாம்
லெமன் கிராஸ் /எலுமிச்சை ஃபுல்
லெமன் கிராஸ் என்றும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆண்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன.
அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரஸ் எனும் முலப்பொருள் சருமத்தை சுத்தம் செய்வதாேடு மட்டுமின்றி சரும தொற்றுகளை தடுக்கவும் செய்யும்.
மெலன் கிராஸ் எண்ணையை இரவு தூங்கும் முன் பஞ்சு உருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ விரைவில் குணமாகும்.
வேப்பிலை
வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரண பொருள்.
இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்துகிறது மற்றும் அழுக்குகள், சருமத்துளைகளை அடைப்பதை தடுக்கிறது.
முக்கியமாக சரும தொற்றுகள் மற்றும் முகப்பருக்களை போக்குகிறது.
அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம் அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம் .
கொய்யா இலை
கொய்யா இலையில் சக்திவாய்ந்த ஆண்டி பாக்ட்ரியல் பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இவை முகத்தில் உள்ள பருக்களின் தோற்றத்தை குறைப்பதோடு மட்டுமின்றி பருக்களை தடுக்கவும் செய்யும்.
அதற்கு கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீரால் தினமும் முகத்தை கழுவ வேண்டும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையில் ஆண்டி செப்டிக் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது சருமத்தில் முகப்பருக்களின் தழும்புகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.
அதற்கு சிறிது வெந்தயக்கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும்.
புதினா
புதினா இலையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டரியல் மருந்தாக செயல்படுகிறது .
இதில் உள்ள சாலி சிலிக் அமிலம் பருக்களை தடுக்க உதவுகிறது.
அதற்கு புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து அல்லது சாறு எடுத்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் நீரால் நன்கு கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்,