மதிய உணவிற்கு ஏற்றவை கூடாதவை
பாலிஷ் தீட்டப்பட்ட அரிசியை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அரிசியை சுத்தப்படுத்த பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைகளில் திரும்பத் திரும்ப பாலிஷ் செய்யப்படுகிறது .
இந்த வகை அரிசியில் சத்துக்கள் எதுவும் இருக்காது .
மாறாக உடலுக்கு ஊர் விளைவிக்கும் ரசாயனங்களை அதிகமாக இருக்கும்.
அதனால் இதை சமைத்து சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை.
கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம் .
உடலுக்கு தேவையான சத்துக்கள் இயற்கையாகவே இதில் நிறைந்து இருக்கின்றன.
இதை சாப்பிடுவதால் உடல் வலிமை பெறும். பசிக்கும்போது எது கிடைக்கிறதோ ?அதை சாப்பிட்டுவிடு என்பார்கள் பெரியவர்கள் .அதுதான் நல்லது. ஆனால் நம் உடலுக்கு தேவைப்படும் அளவை விட உணவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதிய உணவில் அதிக அளவு நீர்ச்சத்துள்ள காய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்றவை நம் உடலுக்கு நலம் பயக்கும் நீர்ச்சத்துள்ள காய்கள். ஏன் இது எண்ணையில் செய்யப்படும் பொறியல்களை தவிர்க்கலாம்.
அதிக அளவில் அவியல், கூட்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
காலையில் உணவுக்கு பின்னர் சிலர் நொறுக்கு தீனி ஜூஸ் என கண்டதையும் சாப்பிடுவார்கள்.
இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும் அல்லது நாம் சாப்பிடும் மதிய உணவின் அளவை குறைத்து விடும் எனவே காலை உணவுக்கும் மதிய உணவுக்குமான இடைவெளியில் நொறுக்குத் தீமையை குறைத்து விடுவதே சிறந்தது.
மதிய உணவில் முட்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம்.
நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும் கோழி, மீன் போன்றவற்றையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பிட்டது செரிமானமாக நேரம் கிடைக்கும் .
அசைவ உணவுகளான மீன் வருவல் பிரியாணி போன்றவற்றை சாப்பிட மதிய நேரமே ஏற்றது .
மதிய உணவில் சமைத்த உணவுகளை தான் சாப்பிட வேண்டும் என்பது இல்லை .
சாலட், பழச்சாறு போன்றவற்றையும் சாப்பிடலாம்.
கோதுமையில் தயாரிக்கப்படும் பரோட்டா, நான் போன்றவற்றுக்கு மதிய வேளையில் நோ சொல்லுங்கள் அதற்கு பதிலாக ஆட்டாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி ரொட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் .
மதிய உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டிய ஒன்று ரசம்.
இது செரிமானம் சீராக நடைபெற உதவும்.
ரசத்தைப் போலவே சூப்பும் மதியம் சாப்பிட சிறந்தது.
தயிர் சாப்பிடுவது புத்துணர்ச்சி கிடைக்க வழி வகுக்கும் .எனவே தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தயிர் ஆகாது என்பவர்கள் நீர்த்த மோரை சேர்த்துக் கொள்ளலாம்.
அனைத்து வகையான காய்களையும், பயிர்களையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும் .
சாப்பிட்டே ஆக வேண்டிய நேரம் என்பதற்காக சாப்பிடக்கூடாது.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தண்ணீர் அருந்தலாம் .
சாப்பிடும் போது குடிக்கக்கூடாது.
சாப்பிட்டு முடித்து அரை மணி நேரம் கழித்து தண்ணீரை பருக வேண்டும்.