ஆஃப் ஆயில் சாப்பிடலாமா?
ஒருவருக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக் கூடியதில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு உணவு முட்டை .
அது ஆம்லெட், ஆப் ஆயில் ,கரண்டி ஆம்லெட், கலக்கி, பொரியல், குழம்பு, பலகாரங்கள், கேக் வகைகள் என பல வகைகளில் சமைக்கப்படுகிறது.
முட்டையில் போன் லைட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்கு, வைட்டமின் ஏ ,பி ,இ, கே, பி ,பை, பி12 ,பி2 ,பி6 மற்றும் கால்சியம் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன.
எனவே முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் முட்டையின் நன்மை என்பது அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து அமைகிறது.
உதாரணமாக ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது அதில் 90 சதவீதம் கலோரியும் , 7.04 கிராம் கொழுப்பும், 6.27 கிராம் புரோட்டினும், குறைந்த கார்போஹைட்ரேட்டும் கொண்டுள்ளது.
இந்த அளவுகோல் என்பது வெறும் முட்டைக்கானது மட்டுமே.
அதோடு சேர்த்து எண்ணை, உப்பு மற்ற பொருட்கள் சேர்த்தால் கூடுதலான அளவுகளைக் கொண்டிருக்கும். எனவே முட்டையின் ஊட்டச்சத்து அதன் சமைக்கும் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது .
அதுவே குறைந்த எண்ணை விட்டு வெறும் முட்டையை கொண்டு தயாரிக்கப்படும்.
1500 முதல் 2000 வரை கலோரிகள் அடங்கியுள்ளது .
மேலும் ஆஃபாயில் முட்டையில் உள்ள சால்மோ மெல்லா என்ற கிருமி தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது நோய் தொற்றை உருவாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் .
எனவே அடிக்கடி ஆஃப் ஆயில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது .
அது போன்று தினசரி முட்டை சாப்பிடும் பழக்கமும் தவறானது.
ஏனெனில் அதில் இருக்கும் மஞ்சள் கருவில் அதிகப்படியான கொழுப்பு சத்து உள்ளது.
இது தினசரி எடுத்துக் கொள்ளும் போது பலவித பிரச்சனைகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன,
உதாரணமாக அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது.
அதில் தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு அபாயகரமான அளவு கொலஸ்ட்ரால் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே இதய பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஏதேனும் உடல்நல பிரச்சனைகள், தீவிரமான மருத்துவ சிகிச்சை எடுப்பவர்கள் மாத்திரைகள் சாப்பிட்டு வருவோர் தவிர்ப்பது நல்லது .
அவர்கள் முட்டையை முழுமையாக, வேக வைத்து, அவிழ்த்த முட்டையாக சாப்பிடுவது நல்லது.
அதே சமயம் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்போர் ஆப் ஆயில் முட்டையுடன் காய்கறிகளையும் சேர்த்து முழுமையான உணவாக சாப்பிடலாம்.