வாழை இலை பலன்கள்
எளிதாக கிடைக்கக்கூடிய பாரம்பரிய தொடர்புடைய வாழை இலை பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
சென்ற தலைமுறையினர் வாழை இலையில் நாள்தோறும் உண்டு வந்ததால் பெரிய ஆரோக்கிய குறைவின்றி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்ந்தனர் .
வாழை இலை பல குணங்களைக் கொண்டது.
இதில் கட்டுப்படும் சாப்பாடு பல மணி நேரம் கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
சாப்பாட்டிற்கு தனி ருசியை தரக்கூடியது .
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் .
நீண்ட நாட்கள் முடி கருப்பாக இருக்கும்.
காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெயில் துணியை நனைத்து புண் வெளியில் தடவி வாழை இலையை மேலே கட்டுப்போட்டு வர புண் விரைவில் குணமாகும்.
தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழையிலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும் .அப்பொழுதுதான் சூட்டின் தாகத்தை குறித்து எரிச்சலை தணிக்கும்.
சின்னம்மை, படுக்கை புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி நாள்தோறும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
குழந்தைகளுக்கு உடலில் நல்ல எண்ணெய் தடவி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குழுமியையும் குழந்தைகள் தோல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
சொரியாசிஸ், தோல் அலர்ஜி மற்றும் கொப்பளங்களால் பாதிக்கப்பட்ட அவதிப்படும்போது வாழை இலையை அந்த இடங்களில் கட்டி வைக்க விரைவில் குணமாகும்.
வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை உணவை எளிதில் செரிமானம் அடையச் செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
நன்கு பசியை தூண்டும்.
மந்தம், வலிமை குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.
அழல் எனப்படும் பித்தமும் தணியும் வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால்.
தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும்.